حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَيَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرُونَ حَدَّثَنَا إِسْمَعِيلُ عَنْ مُحَمَّدٍ وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ كَلْبَ صَيْدٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ
قَالَ عَبْدُ اللَّهِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ أَوْ كَلْبَ حَرْثٍ
“கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர பிற நாயை வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
குறிப்பு :
அபூஹுரைரா (ரலி), “விளைநிலங்களைக் காவல் காக்கும் நாயையும் தவிர” என்று கூறினார்கள் என்று இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குறிப்பிட்டார்கள்.