அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2917

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏أَنَّ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏حَدَّثَهُمْ قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَلَقَّتْ الْمَلَائِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ فَقَالُوا أَعَمِلْتَ مِنْ الْخَيْرِ شَيْئًا قَالَ لَا قَالُوا تَذَكَّرْ قَالَ كُنْتُ أُدَايِنُ النَّاسَ فَآمُرُ فِتْيَانِي أَنْ ‏ ‏يُنْظِرُوا ‏ ‏الْمُعْسِرَ ‏ ‏وَيَتَجَوَّزُوا ‏ ‏عَنْ الْمُوسِرِ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏تَجَوَّزُوا ‏ ‏عَنْهُ

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம், “நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கின்றீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். வானவர்கள் “நன்கு நினைவு படுத்திப்பார்” என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) “நான் மக்களுக்குக் கடன் கொடுத்துவந்தேன். அப்போது (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கும்படியும், பொருளாதாரப் பின்புலம் உள்ள கடனாளிகள் (கடனைத் திருப்பிச் செலுத்த தாமதித்தால்) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் என் ஊழியர்களுக்குக் கட்டளை இட்டிருந்தேன்” என்று கூறினார். எனவே, “அவருடைய குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் (மன்னித்து) விடுங்கள்” என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (வானவர்களிடம்) கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளார் : ஹுதைஃபா (ரலி)

Share this Hadith: