حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
عَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ فِي بَنِي سَلَمَةَ يَمْشِيَانِ فَوَجَدَنِي لاَ أَعْقِلُ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ ثُمَّ رَشَّ عَلَىَّ مِنْهُ فَأَفَقْتُ فَقُلْتُ كَيْفَ أَصْنَعُ فِي مَالِي يَا رَسُولَ اللَّهِ فَنَزَلَتْ { يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ}
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி) அவர்களும் நான் (நோயுற்று) பனூ ஸலிமா எனும் (என்) குலத்தாரிடையே தங்கி இருந்தபோது, நடந்தே வந்து என்னை உடல்நலம் விசாரித்தார்கள். நான் (நோயின் கடுமையால்) சுய நினைவு இழந்தவனாக இருந்த நிலையில் நபி (ஸல்) என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது நீரைக் கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து உளூச் செய்து, எஞ்சிய நீரை என்மீது தெளித்தார்கள். நான் மயக்கம் தெளிந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தின் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?” என்று கேட்டேன். அப்போதுதான், “ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பாகத்திற்குச் சமமானது கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்” (4:11) என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)