அத்தியாயம்: 23, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3035

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، خَطَبَ يَوْمَ جُمُعَةٍ فَذَكَرَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَذَكَرَ أَبَا بَكْرٍ ثُمَّ قَالَ:‏ ‏

إِنِّي لاَ أَدَعُ بَعْدِي شَيْئًا أَهَمَّ عِنْدِي مِنَ الْكَلاَلَةِ مَا رَاجَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي شَىْءٍ مَا رَاجَعْتُهُ فِي الْكَلاَلَةِ وَمَا أَغْلَظَ لِي فِي شَىْءٍ مَا أَغْلَظَ لِي فِيهِ حَتَّى طَعَنَ بِإِصْبَعِهِ فِي صَدْرِي وَقَالَ ‏ “‏ يَا عُمَرُ أَلاَ تَكْفِيكَ آيَةُ الصَّيْفِ الَّتِي فِي آخِرِ سُورَةِ النِّسَاءِ ‏”‏ ‏.‏ وَإِنِّي إِنْ أَعِشْ أَقْضِ فِيهَا بِقَضِيَّةٍ يَقْضِي بِهَا مَنْ يَقْرَأُ الْقُرْآنَ وَمَنْ لاَ يَقْرَأُ الْقُرْآنَ ‏.‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، ح وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ رَافِعٍ عَنْ شَبَابَةَ بْنِ سَوَّارٍ، عَنْ شُعْبَةَ، كِلاَهُمَا عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏

உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஒரு வெள்ளிக்கிழமையில் (ஜும்ஆ) உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரு (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். பிறகு கூறினார்கள்: நான் எனக்குப் பின்னால் ‘கலாலா’வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச்செல்லவில்லை. இந்த ‘கலாலா’ குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் விவாதித்ததைப் போன்று வேறு எந்த ஒன்றுக்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்து கொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். “உமரே! அந்நிஸா அத்தியாயத்தின் இறுதியிலுள்ள கோடைக் கால(த்தில் அருளப்பெற்ற 4:176) வசனம் உமக்குப் போதுமானதாக இல்லையா?” என்று கேட்டார்கள்.

மேலும், “நான் இன்னும் (சிறிது காலம்) உயிர் வாழ்ந்தால் இந்த ‘கலாலா’ தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்)

Share this Hadith: