அத்தியாயம்: 24, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3044

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ :‏

حَمَلْتُ عَلَى فَرَسٍ عَتِيقٍ فِي سَبِيلِ اللَّهِ فَأَضَاعَهُ صَاحِبُهُ فَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ ‏ “‏ لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ ‏”‏


وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ – يَعْنِي ابْنَ مَهْدِيٍّ – عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ بِهَذَا الإِسْنَادِ وَزَادَ ‏ “‏ لاَ تَبْتَعْهُ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ ‏”‏

ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணிப்பதற்காக தானமாக நான் கொடுத்த) உயர் ரகக் குதிரையொன்றில் அனுப்பிவைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) நலியச் செய்துவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு(க்கேட்டால்கூட) விற்றுவிடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப் பெறாதீர். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியைத் தானே தின்னும் நாய்க்கு நிகரானவன் ஆவான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் அல்கத்தாப் (ரலி)


குறிப்பு :

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி (ரஹ்) வழி அறிவிப்பில், “அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரி, அதை விலைக்கு வாங்காதீர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: