அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 492

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَيْحَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَفِينَةَ ‏
‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏صَاحِبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْتَسِلُ ‏ ‏بِالصَّاعِ ‏ ‏وَيَتَطَهَّرُ ‏ ‏بِالْمُدِّ ‏
‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ حُجْرٍ ‏ ‏أَوْ قَالَ ‏ ‏وَيُطَهِّرُهُ ‏ ‏الْمُدُّ ‏ ‏و قَالَ ‏ ‏وَقَدْ كَانَ كَبِرَ وَمَا كُنْتُ أَثِقُ بِحَدِيثِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ அளவு நீரில் குளித்து விடுவார்கள்; ஒரு முத் அளவு நீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : சஃபீனா அபூ அப்திர் ரஹ்மான் (ரலி) வழியாக அபூ ரைஹானா (ரஹ்).

குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான அபூ ரைஹானா (ரஹ்) அவர்கள், “சஃபீனா (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவிக்கும்போது) முதுமைப் பருவத்தை அடைந்திருந்தார்கள். எனவே, அன்னாரது அறிவிப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை” என்று கூறியுள்ளார்.

அலீ பின் ஹுஜ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒரு முத் அளவுத் நீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்து விடுவார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment