அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 492

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَيْحَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَفِينَةَ ‏:‏

‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏صَاحِبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْتَسِلُ ‏ ‏بِالصَّاعِ ‏ ‏وَيَتَطَهَّرُ ‏ ‏بِالْمُدِّ ‏


وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ حُجْرٍ ‏ ‏أَوْ قَالَ ‏ ‏وَيُطَهِّرُهُ ‏ ‏الْمُدُّ ‏ ‏و قَالَ ‏ ‏وَقَدْ كَانَ كَبِرَ وَمَا كُنْتُ أَثِقُ بِحَدِيثِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு ஸாஉ அளவு நீரில் குளித்து விடுவார்கள்; ஒரு முத் அளவு நீரில் உளூச் செய்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : ஸஃபீனா அபூஅப்திர் ரஹ்மான் (ரலி) வழியாக அபூரைஹானா (ரஹ்)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான அபூ ரைஹானா (ரஹ்), “ஸஃபீனா (ரலி), (இந்த ஹதீஸை அறிவிக்கும்போது) முதுமைப் பருவத்தை அடைந்திருந்தார்கள். எனவே, அன்னாரது அறிவிப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை” என்று கூறியுள்ளார்.

அலீ பின் ஹுஜ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒரு முத் அளவுத் நீரில் உளூச் செய்து விடுவார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 491

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَعَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏بِشْرِ بْنِ الْمُفَضَّلِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو رَيْحَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَفِينَةَ ‏ ‏قَالَ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُغَسِّلُهُ ‏ ‏الصَّاعُ ‏ ‏مِنْ الْمَاءِ مِنْ الْجَنَابَةِ وَيُوَضِّئُهُ ‏ ‏الْمُدُّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு ஸாஉ அளவு நீரில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விடுவார்கள்; ஒரு முத் அளவு நீரில் உளூச் செய்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : ஸஃபீனா அபூஅப்திர் ரஹ்மான் (ரலி) வழியாக அபூரைஹானா (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 490

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جَبْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ :‏ ‏

‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَوَضَّأُ ‏ ‏بِالْمُدِّ ‏ ‏وَيَغْتَسِلُ ‏ ‏بِالصَّاعِ ‏ ‏إِلَى خَمْسَةِ ‏ ‏أَمْدَادٍ ‏

நபி (ஸல்), ஒரு முத் அளவுத் தண்ணீரில் உளூச் செய்து விடுவார்கள். ஒரு ஸாஉ அளவு முதல் ஐந்து முத் அளவிலான நீரில் குளித்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 489

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُ ‏:‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْتَسِلُ بِخَمْسِ ‏ ‏مَكَاكِيكَ ‏ ‏وَيَتَوَضَّأُ بِمَكُّوكٍ ‏


و قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏بِخَمْسِ ‏ ‏مَكَاكِيَّ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ مُعَاذٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏ابْنَ جَبْرٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஐந்து முத் அளவு நீரில் குளித்து விடுவார்கள்; ஒரு முத் அளவு நீரில் உளூச் செய்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 488

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ ‏ ‏حَدَّثَتْهُ أَنَّ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏حَدَّثَتْهَا قَالَتْ ‏:‏

‏كَانَتْ هِيَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْتَسِلَانِ فِي الْإِنَاءِ الْوَاحِدِ مِنْ الْجَنَابَةِ ‏

நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காக ஒரே பாத்திர நீரில் (அள்ளிக்) குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை உம்முஸலமா (ரலி) வழியாக ஸைனப் பின்த்தி உம்மிஸலமா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 487

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏قَالَ ‏ ‏أَكْبَرُ عِلْمِي وَالَّذِي يَخْطِرُ عَلَى بَالِي ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الشَّعْثَاءِ ‏ ‏أَخْبَرَنِي أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَخْبَرَهُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَغْتَسِلُ ‏ ‏بِفَضْلِ ‏ ‏مَيْمُونَةَ ‏

மைமூனா (ரலி) (குளித்து) மீதி வைத்த நீரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குளிப்பார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

அன்னை மைமூனா (ரலி), நபி (ஸல்) அவர்களின் மனையியருள் ஒருவரும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னையுமாவார்.

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 486

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الشَّعْثَاءِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ أَخْبَرَتْنِي ‏ ‏مَيْمُونَةُ ‏:‏

أَنَّهَا كَانَتْ ‏ ‏تَغْتَسِلُ هِيَ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي إِنَاءٍ وَاحِدٍ ‏

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தின் நீரில் (அள்ளிக்) குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி) வழியாக இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 485

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏كُنْتُ ‏ ‏أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ إِنَاءٍ بَيْنِي وَبَيْنَهُ وَاحِدٍ فَيُبَادِرُنِي حَتَّى أَقُولَ دَعْ لِي دَعْ لِي قَالَتْ وَهُمَا جُنُبَانِ

நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும்போது, எனக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும் ஒரே பாத்திரத்திலிருந்து (நீரள்ளிக்) குளிப்போம். அப்போது அவர்கள் என்னை முந்திக் கொண்டு தண்ணீர் அள்ளும்போது, ‘எனக்கும் விட்டு வையுங்கள்; எனக்கும் விட்டு வையுங்கள்’ என்று நான் கூறுவேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 484

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَفْلَحُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏كُنْتُ ‏ ‏أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ إِنَاءٍ وَاحِدٍ تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ مِنْ الْجَنَابَةِ ‏

நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காக ஒரே பாத்திரத்திலிருந்து ஒரே நேரத்தில் குளிப்போம். அப்போது எங்கள் இருவருடைய கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் மாறி மாறிச் செல்லும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 483

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏وَكَانَتْ تَحْتَ ‏ ‏الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ:‏

‏أَخْبَرَتْهَا أَنَّهَا كَانَتْ ‏ ‏تَغْتَسِلُ هِيَ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي إِنَاءٍ وَاحِدٍ يَسَعُ ثَلَاثَةَ ‏ ‏أَمْدَادٍ ‏ ‏أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ ‏

நானும் நபி (ஸல்) அவர்களும் ஏறத்தாழ மூன்று முத் அளவுள்ள பாத்திர நீரில் குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஹஃப்ஸா பின்த்தி அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரஹ்)