அத்தியாயம்: 3, பாடம்: 12, ஹதீஸ் எண்: 497

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ بْنِ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏قَالَتْ ‏
‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي ‏ ‏فَأَنْقُضُهُ ‏ ‏لِغُسْلِ الْجَنَابَةِ قَالَ لَا إِنَّمَا ‏ ‏يَكْفِيكِ أَنْ ‏ ‏تَحْثِيَ ‏ ‏عَلَى رَأْسِكِ ثَلَاثَ ‏ ‏حَثَيَاتٍ ‏ ‏ثُمَّ ‏ ‏تُفِيضِينَ ‏ ‏عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏الثَّوْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ بْنِ مُوسَى ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏فَأَنْقُضُهُ ‏ ‏لِلْحَيْضَةِ وَالْجَنَابَةِ فَقَالَ لَا ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَحْمَدُ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏رَوْحِ بْنِ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ بْنُ مُوسَى ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ ‏ ‏أَفَأَحُلُّهُ فَأَغْسِلُهُ مِنْ الْجَنَابَةِ وَلَمْ يَذْكُرْ الْحَيْضَةَ ‏

“அல்லாஹ்வின் தூதரே! நான் தலைமுடியை இறுக்கமாகச் சடையிட்டுக் கொள்பவள் ஆவேன். பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது சடைப்பின்னலை நான் அவிழ்த்து விட வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தேவையில்லை; இரு கையளவுத் தண்ணீரை உன் தலைமீது மூன்று முறை நீ ஊற்றிக் கொள்வது உன(து தலை)க்குப் போதுமானது. பிறகு உன் (உடல்)மீது தண்ணீர் ஊற்றிக் கொள்; துப்புரவாகி விடுவாய்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரலி).

குறிப்பு:

அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) வழி அறிவிப்பில், “மாதவிடாய்க்காகவும் பெருந்துடக்கிற்காகவும் (குளிக்கும்போது) சடைப்பின்னலை அவிழ்த்து விட வேண்டுமா?” என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வினவியதாகவும் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தேவையில்லை” என்று கூறிவிட்டு, தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸின் கருத்துப்படி கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.

ஸகரிய்யா பின் அதீக் (ரலி) வழி அறிவிப்பில், “பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது சடைப்பின்னலை நான் அவிழ்த்துக் கழுவ வேண்டுமா?’ என்று உம்மு ஸலமா (ரலி) வினவியதாக இடம் பெற்றுள்ளது. மாதவிடாய் பற்றிய தகவல் அதில் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment