و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ :
جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ فَقَالَ لَا إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتْ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ وَأَبُو مُعَاوِيَةَ ح و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَرِيرٌ ح و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ كُلُّهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ بِمِثْلِ حَدِيثِ وَكِيعٍ وَإِسْنَادِهِ وَفِي حَدِيثِ قُتَيْبَةَ عَنْ جَرِيرٍ جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ أَسَدٍ وَهِيَ امْرَأَةٌ مِنَّا قَالَ وَفِي حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ زِيَادَةُ حَرْفٍ تَرَكْنَا ذِكْرَهُ
ஃபாத்திமா பின்த்தி அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் குருதிப் போக்குடையவளாக இருக்கின்றேன். (குருதிப் போக்கிலிருந்து) நான் சுத்தமாவதில்லை. எனவே, நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “கூடாது. ஏனெனில், அது மாதவிடாயன்று; சிரைக் குருதி நோயாகும். எனவே, (வழக்கமாக) மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் முடிந்து விட்டால் குருதியைக் கழுவி(க் குளித்து) விட்டுத் தொழுது கொள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
ஜரீர் (ரஹ்) வழியாக குதைபா (ரஹ்) அறிவிக்கும் ஹதீஸில், “ஃபாத்திமா பின்த்தி அபீஹுபைஷ் பின் அப்தில் முத்தலிப் பின் அஸத் (ரலி) (நபியவர்களிடம்) வந்தார். அவர் எங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்மணியாவார்” எனும் கூடுதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “குருதியைக் கழுவிக்கொள்; உளூச் செய்துகொள்” என்று கூடுதலாக ஒரு வரி காணப்படுகிறது. ஆயினும் (ஹம்மாத் மட்டுமே இதை அறிவிப்பதால்) அதை நாம் குறிப்பிடாமல் விட்டுவிட்டோம் என ஆசிரியர் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்கள்.