و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ خَتَنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنَّ هَذَا عِرْقٌ فَاغْتَسِلِي وَصَلِّي
قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تَغْتَسِلُ فِي مِرْكَنٍ فِي حُجْرَةِ أُخْتِهَا زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حَتَّى تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ قَالَ ابْنُ شِهَابٍ فَحَدَّثْتُ بِذَلِكَ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَقَالَ يَرْحَمُ اللَّهُ هِنْدًا لَوْ سَمِعَتْ بِهَذِهِ الْفُتْيَا وَاللَّهِ إِنْ كَانَتْ لَتَبْكِي لِأَنَّهَا كَانَتْ لَا تُصَلِّي و حَدَّثَنِي أَبُو عِمْرَانَ مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ يَعْنِى ابْنَ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ قَالَتْ جَاءَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ بِمِثْلِ حَدِيثِ عَمْرِو بْنِ الْحَارِثِ إِلَى قَوْلِهِ تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّ ابْنَةَ جَحْشٍ كَانَتْ تُسْتَحَاضُ سَبْعَ سِنِينَ بِنَحْوِ حَدِيثِهِمْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த்தி ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு ஆண்டு காலமாகத் தொடர் குருதிப் போக்கு இருந்து வந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது மாதவிடாயன்று; சிரைக் குருதி நோயாகும். எனவே, நீ (வழக்கமான மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்து விட்டுத் தொழுது கொள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
“உம்மு ஹபீபா (ரலி), தம் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியுமான) ஸைனப் பின்த்தி ஜஹ்ஷு (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த துணி அலசும் பாத்திரத்தில் (நின்று) குளிப்பார். அவர் குளிக்கும் நீரின் நிறத்தை அவரது குருதியின் நிறம் மிகைத்திருக்கும்” என்று அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) கூறினார்.
“நான் இந்த ஹதீஸை அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தபோது, “(அபூஸுஃப்யானின் மனைவி) ஹிந்தாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக, இந்தத் தீர்ப்பை அவர் செவியுற்றிருந்தால் அழுது விடுவார். ஏனெனில், (தொடர் குருதிப் போக்காளியான) ஹிந்தா தொழாமல் இருந்து வந்தார்” என்று அபூபக்ரு (ரஹ்) கூறியதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.
ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பு, “பின்த்தி ஜஹ்ஷு (ரலி) அவர்களுக்கு ஏழாண்டுகளாகத் தொடர் குருதிப் போக்கு இருந்து வந்தது …” எனத் தொடங்குகிறது.