و حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ جَمِيعًا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ وَعَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ :
شُكِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلَاةِ قَالَ لَا يَنْصَرِفُ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا
قَالَ أَبُو بَكْرٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ فِي رِوَايَتِهِمَا هُوَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ
ஒருவருக்குத் தொழும்போது வாயு பிரிவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி (ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்டது. அதற்கு நபி (ஸல்), “(வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை அவர் (தொழுகையை) முடித்துக் கொள்ள வேண்டியதில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) வழியாக அவரின் சகோதரர் மகன் அப்பாத் பின் தமீம் (ரஹ்)
குறிப்பு :
அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) மற்றும் ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) என இடம்பெற்றுள்ளது.