அத்தியாயம்: 3, பாடம்: 26, ஹதீஸ் எண்: 541

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا ‏ ‏فَأَشْكَلَ ‏ ‏عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا فَلَا يَخْرُجَنَّ مِنْ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ‏

“உங்களில் ஒருவர் தமது வயிற்றில் (கோளாறு) ஒன்றை உணர்ந்து, அதிலிருந்து (உண்டான வாயு) ஏதேனும் வெளியேறியதா இல்லையா என்று ஐயுற்றால், அவர் (வாயு வெளியேறிய) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை (உளூ முறிந்து விட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறி விட வேண்டாம்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).