அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 554

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَرَوَى ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَيْرٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ سَمِعَهُ يَقُولُ ‏
‏أَقْبَلْتُ أَنَا ‏ ‏وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ يَسَارٍ ‏ ‏مَوْلَى ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى دَخَلْنَا عَلَى ‏ ‏أَبِي الْجَهْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الْأَنْصَارِيِّ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو الْجَهْمِ ‏ ‏أَقْبَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ نَحْوِ ‏ ‏بِئْرِ جَمَلٍ ‏ ‏فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهِ حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ فَمَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ ‏

நானும் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துர் ரஹ்மான் பின் யசார் (ரஹ்) அவர்களும் அபுல் ஜஹ்ம் பின் ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘பிஃரு ஜமல்’ எனும் இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து, ஸலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உடனடியாக பதில் ஸலாம் சொல்லாமல் ஒரு சுவரை நோக்கிப் போய் (அதில் தம் கைகளை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொண்ட பின்னர் அவருக்குப் பதில் ஸலாம் சொன்னார்கள்” என்ற ஹதீஸை அபுல்ஜஹ்ம் (ரலி) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அபுல்ஜஹ்ம் (ரலி) அவர்கள் வழியாக உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்).