அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 553

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ الْقَطَّانَ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ ‏ ‏عَنْ ‏ ‏ذَرٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏أَنَّ رَجُلًا أَتَى ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدْ مَاءً فَقَالَ لَا تُصَلِّ ‏ ‏فَقَالَ ‏ ‏عَمَّارٌ ‏ ‏أَمَا تَذْكُرُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِذْ أَنَا وَأَنْتَ فِي ‏ ‏سَرِيَّةٍ ‏ ‏فَأَجْنَبْنَا فَلَمْ نَجِدْ مَاءً فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ وَصَلَّيْتُ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا كَانَ ‏ ‏يَكْفِيكَ أَنْ تَضْرِبَ بِيَدَيْكَ الْأَرْضَ ثُمَّ تَنْفُخَ ثُمَّ تَمْسَحَ بِهِمَا وَجْهَكَ وَكَفَّيْكَ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏اتَّقِ اللَّهَ يَا ‏ ‏عَمَّارُ ‏ ‏قَالَ إِنْ شِئْتَ لَمْ أُحَدِّثْ بِهِ ‏
‏قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏وَحَدَّثَنِيهِ ‏ ‏ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏ذَرٍّ ‏ ‏قَالَ وَحَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏ذَرٍّ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ الَّذِي ذَكَرَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏نُوَلِّيكَ مَا تَوَلَّيْتَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ذَرًّا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ‏ ‏قَالَ قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏وَقَدْ ‏ ‏سَمِعْتَهُ مِنْ ‏ ‏ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ رَجُلًا أَتَى ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدْ مَاءً ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَزَادَ فِيهِ قَالَ ‏ ‏عَمَّارٌ ‏ ‏يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنْ شِئْتَ ‏ ‏لِمَا جَعَلَ اللَّهُ عَلَيَّ مِنْ حَقِّكَ ‏ ‏لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا ‏ ‏وَلَمْ يَذْكُرْ حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏ذَرٍّ ‏

உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் பெருந்துடக்குடையவனாகி விட்டேன். ஆனால் (குளிப்பதற்கு) எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. (என்ன செய்ய?)” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீர் தொழ வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) அம்மார் (ரலி) அவர்கள், “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நானும் நீங்களும் ஒரு படைப்பிரிவில் இருந்தோம். அப்போது நமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடையாகி) விட்டது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நீங்கள் தொழவில்லை; நானோ (குளியலுக்குப் பகரமாக) மண்ணில் புரண்டெழுந்து பின்னர் தொழுதேன். (இதுபற்றி நான் தெரிவித்தபோது), நபி (ஸல்) அவர்கள், ‘உம்மிரு கைகளையும் தரையில் அடித்துப் பிறகு (கைகளை) ஊதிவிட்டுப் பின்னர் இரு கைகளால் உமது முகத்தையும் இரு முன் கைகளையும் தடவிக் கொண்டிருந்தால் போதுமே (ஏன் மண்ணில் புரண்டீர்கள்?)’ என்று கூறியது உங்களுக்கு நினைவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை அஞ்சிக் கொள், அம்மாரே!” என்று சொன்னார்கள். உடனே அம்மார் (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் இதை நான் யாருக்கும் அறிவிக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி).

குறிப்பு:

ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பில், “நீர் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு உம்மையே நாம் பொறுப்பாளியாக்கினோம்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

“உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது…” என்றே தொடங்கும் நள்ரிப்னு அஷ்ஷுமைல் (ரஹ்) வழி அறிவிப்பில், அம்மார் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு என் மீது இறைவன் விதியாக்கிய கடமையை முன்னிட்டு இதை நான் யாரிடமும் அறிவிக்கக் கூடாது என்று நீங்கள் விரும்பினால் நான் இதை யாருக்கும் அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment