و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ :
كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ مِنْ الْغَائِطِ وَأُتِيَ بِطَعَامٍ فَقِيلَ لَهُ أَلَا تَوَضَّأُ فَقَالَ لِمَ أَأُصَلِّي فَأَتَوَضَّأَ
நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இருந்தபோது, அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றுவிட்டு வந்தார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அவர்களிடம், “நீங்கள் உளூச் செய்து கொள்ளவில்லையே?” என்று (உண்ண வந்தபோது) கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்), “ஏன்? நானென்ன தொழவா போகிறேன், உளூச் செய்து கொள்வதற்கு?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)