அத்தியாயம்: 3, பாடம்: 31, ஹதீஸ் எண்: 562

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ حُوَيْرِثٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏
‏إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَضَى حَاجَتَهُ مِنْ الْخَلَاءِ فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فَأَكَلَ وَلَمْ يَمَسَّ مَاءً ‏
‏قَالَ ‏ ‏وَزَادَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ لَهُ ‏ ‏إِنَّكَ لَمْ تَوَضَّأْ قَالَ مَا أَرَدْتُ صَلَاةً فَأَتَوَضَّأَ ‏ ‏وَزَعَمَ ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّهُ سَمِعَ مِنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டுக் கழிவறையிலிருந்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு உணவு கொண்டு வந்து பரிமாறப்பட்டது. அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். ஆனால், (உளூச் செய்ய) தண்ணீரைத் தொடவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு:

ஸயீத் பின் அல்ஹுவரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், நபி(ஸல்) அவர்களிடம் “நீங்கள் உளூச் செய்யவில்லையே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் இப்போது தொழப் போவதில்லையே – உளூச் செய்து கொள்ள?” என்று கேட்டார்கள் என்பதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 31, ஹதீஸ் எண்: 561

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏مَوْلَى آلِ ‏ ‏السَّائِبِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏ذَهَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏الْغَائِطِ ‏ ‏فَلَمَّا جَاءَ قُدِّمَ لَهُ طَعَامٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ أَلَا تَوَضَّأُ قَالَ ‏ ‏لِمَ أَلِلصَّلَاةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்தபோது அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டது. அப்போது, “நீங்கள் உளூச் செய்து கொள்ளவில்லையே அல்லாஹ்வின் தூதரே!?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “எதற்கு தொழுகைக்கா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 31, ஹதீஸ் எண்: 560

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏
‏كُنَّا عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَجَاءَ مِنْ ‏ ‏الْغَائِطِ ‏ ‏وَأُتِيَ بِطَعَامٍ فَقِيلَ لَهُ أَلَا تَوَضَّأُ فَقَالَ ‏ ‏لِمَ ‏ ‏أَأُصَلِّي فَأَتَوَضَّأَ ‏

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இருந்தோம். அப்போது அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்று விட்டு வந்தார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அவர்களிடம், “நீங்கள் உளூச் செய்து கொள்ளவில்லையே?” என்று (உண்ண வந்தபோது) கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஏன்? நானென்ன தொழவா போகிறேன், உளூச் செய்து கொள்வதற்கு?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 31, ஹதீஸ் எண்: 559

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ مِنْ الْخَلَاءِ فَأُتِيَ بِطَعَامٍ فَذَكَرُوا لَهُ الْوُضُوءَ فَقَالَ ‏ ‏أُرِيدُ أَنْ أُصَلِّيَ فَأَتَوَضَّأَ ‏

நபி (ஸல்) அவர்கள் கழிவறையிலிருந்து வெளிவந்த பின்னர் அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது மக்கள் உளூவைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டினர். நபி(ஸல்) அவர்கள், “நான் தொழப் போவதில்லையே, உளூச் செய்து கொள்வதற்கு?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)