அத்தியாயம்: 3, பாடம்: 09, ஹதீஸ் எண்: 474

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ يَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ ثُمَّ يُفْرِغُ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ فَيَغْسِلُ فَرْجَهُ ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ يَأْخُذُ الْمَاءَ فَيُدْخِلُ أَصَابِعَهُ فِي ‏ ‏أُصُولِ ‏ ‏الشَّعْرِ حَتَّى إِذَا رَأَى أَنْ قَدْ ‏ ‏اسْتَبْرَأَ ‏ ‏حَفَنَ ‏ ‏عَلَى رَأْسِهِ ثَلَاثَ ‏ ‏حَفَنَاتٍ ‏ ‏ثُمَّ ‏ ‏أَفَاضَ ‏ ‏عَلَى سَائِرِ جَسَدِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِهِمْ غَسْلُ الرِّجْلَيْنِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ فَبَدَأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ غَسْلَ الرِّجْلَيْنِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்கானக் குளியலை, முதலில் தம் கைகளை(மணிக்கட்டு வரை) கழுவித் தொடங்குவார்கள். பிறகு வலக்கையால் (தண்ணீர் அள்ளி) இடக்கையின் மீது ஊற்றி மறையுறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். அதன் பின்னர் தண்ணீரை அள்ளி அள்ளி தலையின் மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழைத்துத் தேய்ப்பார்கள். தலைமுடி முழுவதும் நனைந்து விட்டது உறுதியானதும் இரு கைகளாலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளித் தலையில் ஊற்றுவார்கள். பிறகு உடல் முழுவதிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் கால்களைக் கழுவுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு :

இந்த ஹதீஸின் அபூ குரைப் (ரஹ்) அறிவிப்பில், கால்களைக் கழுவியது பற்றிக் குறிப்பிடப் படவில்லை. வகீஃ (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்கானக் குளியலை, முதலில் தம் கைகளை(மணிக்கட்டு வரை) மூன்று முறை கழுவித் தொடங்குவார்கள் …” எனத் தடவைகள் குறிப்பிடப் படுகிறது. இறுதியில் கால்களைக் கழுவியது பற்றிய குறிப்பு இதிலும் இடம் பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment