அத்தியாயம்: 30, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3245

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا :‏

وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ ‏.‏ فَقَالَ الَّذِي شَرَى الأَرْضَ إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا – قَالَ – فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ فَقَالَ أَحَدُهُمَا لِي غُلاَمٌ وَقَالَ الآخَرُ لِي جَارِيَةٌ ‏.‏ قَالَ أَنْكِحُوا الْغُلاَمَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِكُمَا مِنْهُ وَتَصَدَّقَا ‏”‏

ஒருவர், மற்றொருவருக்குச் சொந்தமான நிலம் ஒன்றை அவரிடமிருந்து விலைக்கு வாங்கினார். நிலத்தை வாங்கியவர், அந்நிலத்தில் தங்கம் நிரம்பிய (களி மண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் நிலத்தை விற்றவரிடம், “என்னிடமிருந்து உன் தங்கத்தைப் பெற்றுக்கொள். உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் விலைக்கு வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார்.

நிலத்தை விற்றவரோ, “நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்கு உரியதே)” என்று கூறினார்.

(இருவருக்குமிடையே தகராறு முற்றி) இன்னொருவரிடம் வழக்கைக் கொண்டுசென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்றவர், “உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றனரா?” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், “எனக்கு மகன் ஒருவன் இருக்கின்றான்” என்று சொன்னார். மற்றொருவர், “எனக்கு மகள் ஒருத்தி இருக்கின்றாள்” என்று சொன்னார். வழக்கைக் கேட்டவர், “அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தர்மமும் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

Share this Hadith: