حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، حَدَّثَنَا سُلَيْمُ بْنُ أَخْضَرَ، عَنِ ابْنِ عَوْنٍ، قَالَ كَتَبْتُ إِلَى نَافِعٍ أَسْأَلُهُ عَنِ الدُّعَاءِ، قَبْلَ الْقِتَالِ قَالَ:
فَكَتَبَ إِلَىَّ إِنَّمَا كَانَ ذَلِكَ فِي أَوَّلِ الإِسْلاَمِ قَدْ أَغَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَنِي الْمُصْطَلِقِ وَهُمْ غَارُّونَ وَأَنْعَامُهُمْ تُسْقَى عَلَى الْمَاءِ فَقَتَلَ مُقَاتِلَتَهُمْ وَسَبَى سَبْيَهُمْ وَأَصَابَ يَوْمَئِذٍ – قَالَ يَحْيَى أَحْسِبُهُ قَالَ – جُوَيْرِيَةَ – أَوْ قَالَ الْبَتَّةَ – ابْنَةَ الْحَارِثِ وَحَدَّثَنِي هَذَا الْحَدِيثَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَكَانَ فِي ذَاكَ الْجَيْشِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ وَقَالَ جُوَيْرِيَةَ بِنْتَ الْحَارِثِ . وَلَمْ يَشُكَّ .
தாக்குதல் தொடுப்பதற்கு முன் இஸ்லாமிய அழைப்பை எதிரிகளுக்கு விடுப்பது பற்றிக் கேட்டு நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு பதில் எழுதினார்கள்:
“இஸ்லாத்தின் ஆரம்பத்தில்தான் இவ்வாறு (அழைப்பு விடுக்கும் வழக்கம்) இருந்தது. (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘பனுல் முஸ்தலிக்’ குலத்தார் அசட்டையாக இருந்தபோது அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக்கொண்டு இருந்தன. அவர்களில் போர் வீரர்களைக் கொன்றார்கள்; பெண்களை, சிறார்களைக் கைதிகளாகப் பிடித்தார்கள். அன்றுதான் ஜுவைரியா / பின்தி அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக்கொண்டார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அப்போது (நபியவர்களின்) அப்படையில் இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்) & இப்னு அவ்னு (ரஹ்)
குறிப்பு :
இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) கூறுகின்றார்: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஸுலைம் பின் அக்ளர் (ரஹ்), “நபி (ஸல்) அன்றுதான் ஜுவைரியாவை உரிமையாக்கிக்கொண்டார்கள்” என்று சொன்னதாகவே நான் எண்ணுகின்றேன். ஆனால், ‘பின்த்துல் ஹாரிஸை’ என்று அவர் சொன்னது உறுதி.
இப்னு அபீ அதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ஜுவைரியா பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை நபி (ஸல்) உரிமை ஆக்கிக்கொண்டார்கள்” என்று ஐயப்பாடின்றி இடம்பெற்றுள்ளது.