அத்தியாயம்: 32, பாடம்: 22, ஹதீஸ் எண்: 3313

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ – وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، – عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ :‏

نَزَلَ أَهْلُ قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى سَعْدٍ فَأَتَاهُ عَلَى حِمَارٍ فَلَمَّا دَنَا قَرِيبًا مِنَ الْمَسْجِدِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلأَنْصَارِ ‏”‏ قُومُوا إِلَى سَيِّدِكُمْ – أَوْ خَيْرِكُمْ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ ‏”‏ ‏.‏ قَالَ تَقْتُلُ مُقَاتِلَتَهُمْ وَتَسْبِي ذُرِّيَّتَهُمْ ‏.‏ قَالَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ قَضَيْتَ بِحُكْمِ اللَّهِ – وَرُبَّمَا قَالَ – قَضَيْتَ بِحُكْمِ الْمَلِكِ ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرِ ابْنُ الْمُثَنَّى وَرُبَّمَا قَالَ ‏”‏ قَضَيْتَ بِحُكْمِ الْمَلِكِ ‏”‏


وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي حَدِيثِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ اللَّهِ ‏”‏ ‏.‏ وَقَالَ مَرَّةً ‏”‏ لَقَدْ حَكَمْتَ بِحُكْمِ الْمَلِكِ ‏”‏ ‏

பனூ குறைழா குலத்தார் (தமது கோட்டையிலிருந்து இறங்கிவந்து தம் நட்புக் குலத் தலைவரான) ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இணங்கிவந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள்.

ஸஅத் (ரலி) ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள்.

(அங்கிருந்த) பள்ளிவாசலுக்கு அருகில் ஸஅத் (ரலி) வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அன்ஸாரிகளை நோக்கி “உங்கள் தலைவரை / உங்களில் சிறந்தவரை (வரவேற்பதற்காக) நோக்கி எழுந்து செல்லுங்கள்” என்று கூறினார்கள்.

பிறகு, “இவர்கள் உங்களது தீர்ப்பை ஏற்றுக்கொள்ள (இணங்கி) இறங்கி வந்திருக்கிறார்கள் (ஸஅதே!)” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஸஅத் (ரலி), “இவர்களிலுள்ள போர் வீரர்களைக் கொன்றுவிடுங்கள். இவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.

நபி (ஸல்), “நீங்கள் அல்லாஹ்வின் / அரசனின் தீர்ப்பையே (இவர்களின் விஷயத்தில்) வழங்கினீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “அரசனின் தீர்ப்பை” என்பது இடம்பெறவில்லை.

அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி (ரஹ்) வழி அறிவிப்பில் ஒரு தடவை, “நீங்கள் இவர்களின் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பையே அளித்திருக்கின்றீர்கள் (ஸஅதே!) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. மற்றோரு தடவை “நீங்கள் அரசனின் தீர்ப்பை அளிந்திருக்கின்றீர்கள்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith: