அத்தியாயம்: 32, பாடம்: 22, ஹதீஸ் எண்: 3314

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، كِلاَهُمَا عَنِ ابْنِ نُمَيْرٍ، قَالَ ابْنُ الْعَلاَءِ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ :‏

أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ رَمَاهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ يُقَالُ لَهُ ابْنُ الْعَرِقَةِ ‏.‏ رَمَاهُ فِي الأَكْحَلِ فَضَرَبَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْمَةً فِي الْمَسْجِدِ يَعُودُهُ مِنْ قَرِيبٍ فَلَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْخَنْدَقِ وَضَعَ السِّلاَحَ فَاغْتَسَلَ فَأَتَاهُ جِبْرِيلُ وَهُوَ يَنْفُضُ رَأْسَهُ مِنَ الْغُبَارِ فَقَالَ وَضَعْتَ السِّلاَحَ وَاللَّهِ مَا وَضَعْنَاهُ اخْرُجْ إِلَيْهِمْ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ فَأَيْنَ ‏”‏ ‏.‏ فَأَشَارَ إِلَى بَنِي قُرَيْظَةَ فَقَاتَلَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَلُوا عَلَى حُكْمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْحُكْمَ فِيهِمْ إِلَى سَعْدٍ قَالَ فَإِنِّي أَحْكُمُ فِيهِمْ أَنْ تُقْتَلَ الْمُقَاتِلَةُ وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ وَالنِّسَاءُ وَتُقْسَمَ أَمْوَالُهُمْ


وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ قَالَ أَبِي فَأُخْبِرْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏”‏ ‏.

அகழ்ப் போரின்போது ஸஅத் பின் முஆத் (ரலி) தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் இப்னுல் அரிகா எனும் ஒரு குறைஷி அம்பெய்துவிட்டான். அருகில் இருந்து, அவரது உடல் நலத்தை விசாரித்து அறிவதற்கு வசதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்காகக்) கூடாரமொன்றை அமைத்தார்கள்.

அகழ்ப் போரை முடித்துவிட்டு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள்.

அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மனித உருவில்) வந்து, “நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்” என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எங்கே?” என்று கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் (அலை), பனூ குறைழா குலத்தார் (உடைய வசிப்பிடம்) நோக்கி சைகை செய்தார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்று) அவர்களுடன் போரிட்டார்கள். (பல நாட்கள் முற்றுகைக்குப் பின்) பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்க இறங்கிவந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பனூ குறைழா தொடர்பான முடிவை (பனூ குறைழா குலத்தாரின் நட்புக் குலத் தலைவரான) ஸஅத் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

ஸஅத் (ரலி), “பனூ குறைழாக்களில் போர் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் போர்க் கைதிகளாக ஆக்கப்பட வேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் இவர்கள் விஷயத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் தீர்ப்பையே அளித்திருக்கின்றீர்கள்” என்று (ஸஅத் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அறிவிக்கின்றார்.

Share this Hadith: