அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3339

وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ حُنَيْفٍ بِصِفِّينَ يَقُولُ :‏

اتَّهِمُوا رَأْيَكُمْ عَلَى دِينِكُمْ فَلَقَدْ رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ وَلَوْ أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ أَمْرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم – مَا فَتَحْنَا مِنْهُ فِي خُصْمٍ إِلاَّ انْفَجَرَ عَلَيْنَا مِنْهُ خُصْمٌ ‏

‘ஸிஃப்பீன்’ போரின்போது, “(நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறை காணுங்கள்.

அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபிய்யா) நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் மறுத்திருப்பேன்.

இன்றைய (உங்கள்) பிரச்சினை சிக்கல்கள் நிறைந்தது. (அவற்றுள்) ஒன்றைச் சீராக்கும்போது, மற்றொன்று தலை தூக்குகின்றது” என்று ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி).வழியாக அபூவாயில் ஷகீக் பின் ஸலமா (ரஹ்)

Share this Hadith: