அத்தியாயம்: 32, பாடம்: 39, ஹதீஸ் எண்: 3349

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدٌ وَحَوْلَهُ نَاسٌ مِنْ قُرَيْشٍ إِذْ جَاءَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ بِسَلاَ جَزُورٍ فَقَذَفَهُ عَلَى ظَهْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَرْفَعْ رَأْسَهُ فَجَاءَتْ فَاطِمَةُ فَأَخَذَتْهُ عَنْ ظَهْرِهِ وَدَعَتْ عَلَى مَنْ صَنَعَ ذَلِكَ فَقَالَ ‏ “‏ اللَّهُمَّ عَلَيْكَ الْمَلأَ مِنْ قُرَيْشٍ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ وَعُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ وَشَيْبَةَ بْنَ رَبِيعَةَ وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ أَوْ أُبَىَّ بْنَ خَلَفٍ ‏”‏ ‏.‏ شُعْبَةُ الشَّاكُّ قَالَ فَلَقَدْ رَأَيْتُهُمْ قُتِلُوا يَوْمَ بَدْرٍ فَأُلْقُوا فِي بِئْرٍ غَيْرَ أَنَّ أُمَيَّةَ أَوْ أُبَيًّا تَقَطَّعَتْ أَوْصَالُهُ فَلَمْ يُلْقَ فِي الْبِئْرِ ‏.‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَزَادَ وَكَانَ يَسْتَحِبُّ ثَلاَثًا يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ ‏”‏ ‏.‏ ثَلاَثًا وَذَكَرَ فِيهِمُ الْوَلِيدَ بْنَ عُتْبَةَ وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ وَلَمْ يَشُكَّ ‏.‏ قَالَ أَبُو إِسْحَاقَ وَنَسِيتُ السَّابِعَ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இறையில்லம் கஅபா அருகில்) தொழுகையில் ஸஜ்தாவில் இருந்தார்கள். அவர்களைச் சுற்றி குறைஷியர் சிலர் இருந்தனர். அப்போது உக்பா பின் அபீமுஐத் என்பான் அறுக்கப்பட்ட ஓர் ஒட்டகத்தின் கருவைச் சுற்றியுள்ள சவ்வுகளுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகில் அதைப் போட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்த(முடிய)வில்லை.

பின்னர் (அவர்களுடைய மகள்) ஃபாத்திமா (ரலி) வந்து அவர்களது முதுகிலிருந்தவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாறு செய்தோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! குறைஷிப் பிரமுகர்களான அபூஜஹ்லு பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத், ஷைபா பின் ரபீஆ, உமய்யா (அ) உபை பின் கலஃப் ஆகியோரை நீயே கவனித்துக்கொள்” என்று பிரார்த்தித்தார்கள்.

அவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு, ஒரு கிணற்றில் போடப்பட்டனர். உமய்யா (அ) உபையின் மூட்டுகள் தனித்தனியே கழன்றுகொண்டதால் அவன் (இழுத்துச் சென்று) கிணற்றில் போடப்படவில்லை.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்புகள் :

உமய்யா (அ) உபை பின் கலஃப் என்பது அறிவிப்பாளர் ஷுஅபாவின் ஐயப்பாடு.

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஏதேனும் பிரார்த்தித்தால்) மூன்று முறை கோருவதையே விரும்புவார்கள். ‘இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்’ என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

மேலும் வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப் ஆகியோர் பெயரையும் குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்பிலுள்ள ஐயப்பாடு இதில் இல்லை. “ஏழாமவர் பெயரை நான் மறந்துவிட்டேன்” என்று அபூஇஸ்ஹாக் (ரஹ்) கூறியதாகவும் காணப்படுகிறது.

Share this Hadith: