حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، قَالَ :
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ وَلَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ وَهُوَ يَقُولُ
”وَاللَّهِ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا إِنَّ الأُلَى قَدْ أَبَوْا عَلَيْنَا”
قَالَ وَرُبَّمَا قَالَ ” إِنَّ الْمَلاَ قَدْ أَبَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا ” . وَيَرْفَعُ بِهَا صَوْتَهُ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، . فَذَكَرَ مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ “ إِنَّ الأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا ” .
அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டும் பணியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். மண், அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்துவிட்டிருந்தது. அப்போது அவர்கள் பாடினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் (நீ) இல்லாவிட்டால், நாங்கள்
நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்
தர்மம் செய்திருக்கமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்.
எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக! இவர்கள்
(கூட்டுப் படையினர்) எங்களுக்கு
அக்கிரமம் இழைத்துவிட்டனர்.
சில வேளை,
இந்தப் பிரமுகர்கள்
எங்களை நிராகரித்துவிட்டனர்.
இவர்கள் எங்களைச்
சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
நாங்கள் இடம் தரமாட்டோம்!
என்று பாடினார்கள். “(நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம்” என) இந்த (இறுதி) வாசகத்தை உரத்த குரலில் கூறிக்கொண்டு இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
குறிப்பு :
ஹதீஸ் எண் 3342 காண்க
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி (ரஹ்) வழி அறிவிப்பில், “இவர்கள் எங்களை நிராகரித்து விட்டனர்” என்பதற்குப் பகரமாக, “இவர்கள் எங்கள்மீது எல்லை மீறிவிட்டனர்” என்று இடம்பெற்றுள்ளது.