அத்தியாயம்: 32, பாடம்: 44, ஹதீஸ் எண்: 3369

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم كَانُوا يَقُولُونَ يَوْمَ الْخَنْدَقِ

نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الإِسْلاَمِ مَا بَقِينَا أَبَدًا أَوْ قَالَ عَلَى الْجِهَادِ شَكَّ حَمَّادٌ

وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ

‏اللَّهُمَّ إِنَّ الْخَيْرَ خَيْرُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ ‏

அகழ்ப் போர் நாளில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்கள்,
“நாங்கள் (எத்தகையோர் எனில்)
உயிரோடிருக்கும் காலம்வரை
நாங்கள் இஸ்லாத்தில் நிலைப்போம் (அல்லது)
அறப்போர் செய்வோம்
என முஹம்மது (ஸல்) அவர்களிடம்
உறுதிமொழி கொடுத்தவர்கள்”
என்று பாடிக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்),

“இறைவா! மறுமையின் நன்மையே
(நிலையான) நன்மையாகும்.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்ஸாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ மன்னிப்பருள்வாயாக!”
என்று பாடினார்கள்

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 44, ஹதீஸ் எண்: 3368

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ شَيْبَانُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

كَانُوا يَرْتَجِزُونَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَهُمْ وَهُمْ يَقُولُونَ اللَّهُمَّ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُ الآخِرَهْ فَانْصُرِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ


وَفِي حَدِيثِ شَيْبَانَ بَدَلَ فَانْصُرْ فَاغْفِرْ ‏.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அகழ் தோண்டிக்கொண்டு) இருந்தபோது மக்கள்,

இறைவா!
மறுமையின் நன்மையைத் தவிர
வேறு (நிலையான) நன்மை
எதுவுமில்லை.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்ஸாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ உதவி செய்வாயாக!
என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) வழி அறிவிப்பில், “உதவி செய்வாயாக!“ என்பதற்குப் பகரமாக “மன்னிப்பருள்வாயாக!“ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 44, ஹதீஸ் எண்: 3367

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”اللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَةِ”‏ قَالَ شُعْبَةُ أَوْ قَالَ ‏‏ اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَأَكْرِمِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),

“இறைவா! மறுமை வாழ்வே
(நிரந்தரமான) வாழ்வாகும் (அல்லது)
“இறைவா!
மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு
வேறெதுவுமில்லை’
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்
அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும்
நீ கண்ணியப்படுத்துவாயாக!”
என்று பாடினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

‘அல்லது’ எனும் ஐயத்துடன் அறிவிப்பவர் ஷுஅபா (ரஹ்) ஆவார்.

அத்தியாயம்: 32, பாடம்: 44, ஹதீஸ் எண்: 3366

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ، جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ

 ‏”اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ ‏”‏ ‏‏

நபி (ஸல்) (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),
“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்ஸாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பருள்வாயாக!”
என்று பாடினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 44, ஹதீஸ் எண்: 3365

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ :‏

جَاءَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَحْفِرُ الْخَنْدَقَ وَنَنْقُلُ التُّرَابَ عَلَى أَكْتَافِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏

‏ “اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَةِ فَاغْفِرْ لِلْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ”‏

நாங்கள் அகழ் தோண்டிக்கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டும் இருந்தபோது, எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள். அப்போது அவர்கள்,
“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!”
என்று பாடினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 44, ஹதீஸ் எண்: 3364

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ وَلَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ وَهُوَ يَقُولُ

‏”وَاللَّهِ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا إِنَّ الأُلَى قَدْ أَبَوْا عَلَيْنَا”‏

قَالَ وَرُبَّمَا قَالَ ‏”‏ إِنَّ الْمَلاَ قَدْ أَبَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا ‏”‏ ‏.‏ وَيَرْفَعُ بِهَا صَوْتَهُ ‏.‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، ‏.‏ فَذَكَرَ مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ ‏ “‏ إِنَّ الأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا ‏”‏ ‏.‏

அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டும் பணியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். மண், அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்துவிட்டிருந்தது. அப்போது அவர்கள் பாடினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் (நீ) இல்லாவிட்டால், நாங்கள்
நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்
தர்மம் செய்திருக்கமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்.

எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக! இவர்கள்
(கூட்டுப் படையினர்) எங்களுக்கு
அக்கிரமம் இழைத்துவிட்டனர்.

சில வேளை,
இந்தப் பிரமுகர்கள்
எங்களை நிராகரித்துவிட்டனர்.
இவர்கள் எங்களைச்
சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
நாங்கள் இடம் தரமாட்டோம்!

என்று பாடினார்கள். “(நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம்” என) இந்த (இறுதி) வாசகத்தை உரத்த குரலில் கூறிக்கொண்டு இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

ஹதீஸ் எண் 3342 காண்க

அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி (ரஹ்) வழி அறிவிப்பில், “இவர்கள் எங்களை நிராகரித்து விட்டனர்” என்பதற்குப் பகரமாக, “இவர்கள் எங்கள்மீது எல்லை மீறிவிட்டனர்” என்று இடம்பெற்றுள்ளது.