حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :
أَنَّ ثَمَانِينَ، رَجُلاً مِنْ أَهْلِ مَكَّةَ هَبَطُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ جَبَلِ التَّنْعِيمِ مُتَسَلِّحِينَ يُرِيدُونَ غِرَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَصْحَابِهِ فَأَخَذَهُمْ سَلَمًا فَاسْتَحْيَاهُمْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ { وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ}
மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) மீதும் நபித்தோழர்கள் மீதும் திடீர்த் தாக்குதல் தொடுப்பதற்காக ‘தன்ஈம்’ மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கிவந்தனர். அப்போது (தாக்குதல் தொடுக்க முடியாமல்) சரணடைந்த அவர்களை நபி (ஸல்) பிடித்து, (அவர்களை மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், அவர்களைத் தாக்காமல் உங்கள் கைகளையும் உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளையும் அவனே தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனத்தை அருளினான்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)