அத்தியாயம்: 35, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3623

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَنْ صَلَّى صَلاَتَنَا وَوَجَّهَ قِبْلَتَنَا وَنَسَكَ نُسُكَنَا فَلاَ يَذْبَحْ حَتَّى يُصَلِّيَ ‏”‏ ‏.‏ فَقَالَ خَالِي يَا رَسُولَ اللَّهِ قَدْ نَسَكْتُ عَنِ ابْنٍ لِي ‏.‏ فَقَالَ ‏”‏ ذَاكَ شَىْءٌ عَجَّلْتَهُ لأَهْلِكَ ‏”‏ ‏.‏ فَقَالَ إِنَّ عِنْدِي شَاةً خَيْرٌ مِنْ شَاتَيْنِ قَالَ ‏”‏ ضَحِّ بِهَا فَإِنَّهَا خَيْرُ نَسِيكَةٍ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜ்ஜுப் பெருநாளன்று நிகழ்த்திய உரையில்), “யார் நமது தொழும் திசையை (கிப்லா) முன்னோக்கி, நமது தொழுகையைத் தொழுது, நமது பலியிடும் வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் (பலிப் பிராணியை) அறுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.

அப்போது என் தாய்மாமா, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் மகனுக்காக (தொழுகைக்கு) முன்பே பலி கொடுத்துவிட்டேனே?” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது நீங்கள் உங்களுடைய வீட்டாரின் தேவைக்காக அவசரப்பட்டு அறுத்து விட்ட ஒன்றாகும். (அது பலியாகாது)” என்று கூறினார்கள்.

அதற்கு என் தாய்மாமா, “என்னிடம் இரண்டு ஆடுகளைவிடச் சிறந்த ஆடொன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை அறுத்து பலி கொடுப்பீராக! அது (உமது) பலிப் பிராணியில் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

Share this Hadith:

Leave a Comment