அத்தியாயம்: 35, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3622

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ :‏

‏أَنَّ خَالَهُ أَبَا بُرْدَةَ بْنَ نِيَارٍ، ذَبَحَ قَبْلَ أَنْ يَذْبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ يَا رَسُولَ اللهِ، إِنَّ هَذَا يَوْمٌ اللَّحْمُ فِيهِ مَكْرُوهٌ، وَإِنِّي عَجَّلْتُ نَسِيكَتِي لِأُطْعِمَ أَهْلِي وَجِيرَانِي وَأَهْلَ دَارِي، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعِدْ نُسُكًا، فَقَالَ يَا رَسُولَ اللهِ، إِنَّ عِنْدِي عَنَاقَ لَبَنٍ هِيَ خَيْرٌ مِنْ شَاتَيْ لَحْمٍ، فَقَالَ: هِيَ خَيْرُ نَسِيكَتَيْكَ، وَلَا تَجْزِي جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ فَقَالَ ‏ “‏ لاَ يَذْبَحَنَّ أَحَدٌ حَتَّى يُصَلِّيَ ‏”‏ ‏.‏ قَالَ فَقَالَ خَالِي يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا يَوْمٌ اللَّحْمُ فِيهِ مَكْرُوهٌ ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ هُشَيْمٍ ‏.‏

என் தாய்மாமா அபூபுர்தா பின் நியார் (ரலி), நபி (ஸல்) பலி கொடுப்பதற்கு முன்பே ஆட்டை அறுத்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! இது, (பிறரிடம்) இறைச்சி (கேட்பது) விரும்பத் தகாத நாளாகும். நான் என் குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும் என் இல்லத்தாருக்கும் உணவளிப்பதற்காக (தொழுகைக்கு) முன்பே அறுத்துவிட்டேன்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மீண்டும் ஒரு பிராணியை அறுத்து (பலியாகக்) கொடுப்பீராக!” என்று சொன்னார்கள். அபூபுர்தா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுடைய பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள். அதற்கு, “அது (தொழுகைக்கு முன்பும், தொழுகைக்குப் பின்பும் கொடுத்த) உம்முடைய இரு பலிகளில் சிறந்ததாகும். ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு உமக்குப் பிறகு வேறெவருக்கும் செல்லாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

குறிப்பு :

யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது “(பெருநாள் தொழுகை) தொழாத வரை உங்களில் யாரும் அறுத்துப் பலியிட வேண்டாம்” என்று கூறினார்கள். அப்போது என் தாய்மாமா, “அல்லாஹ்வின் தூதரே! இது, (பிறரிடம்) இறைச்சி (கேட்பது) விரும்பத் தகாத நாளாகும்…” என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று தொடர்ந்ததாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment