அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3704

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرٌ، – يَعْنِي ابْنَ حَازِمٍ – حَدَّثَنَا يَعْلَى بْنُ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ :‏

حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ أَلاَ تَسْمَعُ مَا يَقُولُ ابْنُ عُمَرَ قَالَ وَمَا يَقُولُ قُلْتُ قَالَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَقَالَ صَدَقَ ابْنُ عُمَرَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَقُلْتُ وَأَىُّ شَىْءٍ نَبِيذُ الْجَرِّ فَقَالَ كُلُّ شَىْءٍ يُصْنَعُ مِنَ الْمَدَرِ

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்கள் பற்றிக் கேட்டேன். இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானத்திற்குத் தடை விதித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பின்னர் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, “இப்னு உமர் (ரலி) கூறுவதைக் கேட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இப்னு உமர் என்ன கூறுகின்றார்?” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானத்திற்குத் தடை விதித்தார்கள் என்று கூறினார்” என்றேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இப்னு உமர் உண்மை சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நபீதுல் ஜர்ரு’க்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், ‘நபீதுல் ஜர் என்பது என்ன?” என்று கேட்டேன். அதற்கு, “சுட்ட களிமண்ணில் தயாரிக்கப்படும் (பாத்திரங்கள்) ஒவ்வொன்றும் (நபீதுல் ஜர்) ஆகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment