அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3703

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُرَيْجُ بْنُ يُونُسَ، – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ – قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ مَنْصُورِ بْنِ حَيَّانَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ :‏ ‏

أَشْهَدُ عَلَى ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ أَنَّهُمَا شَهِدَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப் பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன் படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள் என நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்று இப்னு உமர் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதற்கு நான் சாட்சி கூறுகின்றேன்.

அறிவிப்பாளர்கள் : இப்னு உமர், இப்னு அப்பாஸ் (அன்ஹுமா) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment