அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3713

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، حَدَّثَنِي زَاذَانُ، قَالَ :‏

قُلْتُ لاِبْنِ عُمَرَ حَدِّثْنِي بِمَا نَهَى عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الأَشْرِبَةِ بِلُغَتِكَ وَفَسِّرْهُ لِي بِلُغَتِنَا فَإِنَّ لَكُمْ لُغَةً سِوَى لُغَتِنَا ‏.‏ فَقَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمِ وَهِيَ الْجَرَّةُ وَعَنِ الدُّبَّاءِ وَهِيَ الْقَرْعَةُ وَعَنِ الْمُزَفَّتِ وَهُوَ الْمُقَيَّرُ وَعَنِ النَّقِيرِ وَهْىَ النَّخْلَةُ تُنْسَحُ نَسْحًا وَتُنْقَرُ نَقْرًا وَأَمَرَ أَنْ يُنْتَبَذَ فِي الأَسْقِيَةِ


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، فِي هَذَا الإِسْنَادِ ‏

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) தடை செய்துள்ள குடிபானங்களைப் பற்றி உங்களது (வட்டார) மொழியில் கூறி, அதற்கு எங்களது (வட்டார) மொழியில் எனக்கு விளக்கமளியுங்கள். ஏனெனில், எங்களது மொழி வழக்கு அல்லாத வேறொரு மொழி வழக்கு உங்களுக்கு உள்ளது” என்று கூறினேன்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஹன்த்தமை’ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். அது, சுட்ட களிமண் பாத்திரமாகும். மேலும், அவர்கள் ‘துப்பா’வையும் தடை செய்தார்கள். அது, சுரைக்குடுவையாகும். ‘முஸஃப்பத்’தையும் தடை செய்தார்கள். அது, தார் பூசப்பட்ட பாத்திரமாகும். ‘நக்கீரை’யும் தடை செய்தார்கள். அது, பேரீச்சை மரத்தின் மேற்பட்டை உரிக்கப்பட்டு பின்னர் நன்கு குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும்” என்று கூறிவிட்டு, “(இவற்றை விடுத்து) தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைக்குமாறு உத்தரவிட்டார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸாதான் (ரஹ்)