அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3932

وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا :‏

نَصَبَتْ سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَعَهُ قَالَتْ فَقَطَعْتُهُ وِسَادَتَيْنِ 


فَقَالَ رَجُلٌ فِي الْمَجْلِسِ حِينَئِذٍ يُقَالُ لَهُ رَبِيعَةُ بْنُ عَطَاءٍ مَوْلَى بَنِي زُهْرَةَ أَفَمَا سَمِعْتَ أَبَا مُحَمَّدٍ يَذْكُرُ أَنَّ عَائِشَةَ قَالَتْ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَرْتَفِقُ عَلَيْهِمَا قَالَ ابْنُ الْقَاسِمِ لاَ ‏.‏ قَالَ لَكِنِّي قَدْ سَمِعْتُهُ ‏‏ يُرِيدُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ

நான் (எனது வீட்டில்) உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வீட்டுக்கு) வந்தபோது, அதை அப்புறப்படுத்திவிட்டார்கள். அதை நான் துண்டித்து இரு திண்டுகளாக ஆக்கிக்கொண்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

(இதை அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அறிவித்த) அந்த வேளையில், அங்கு அவையில் இருந்த பனூ ஸுஹ்ரா குலத்தாரின் முன்னாள் அடிமையான ரபீஆ பின் அதாஉ (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்விரு திண்டுகளில் தலை சாய்த்துக்கொள்வார்கள் என ஆயிஷா (ரலி) சொன்னதாக (உங்கள் தந்தை) அபூமுஹம்மத் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) கூறியதை நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) “இல்லை” என்று பதிலளித்தார்கள். “ஆனால், காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவ்வாறு கூறியதை நான் செவியுற்றேன்” என்று ரபீஆ பின் அதாஉ (ரஹ்) கூறினார்.

Share this Hadith:

Leave a Comment