حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنِي أَبُو سَعِيدٍ، الأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ ”
وَلَمْ يَذْكُرِ الأَشَجُّ إِنَّ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ كُلُّهُمْ عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي رِوَايَةِ يَحْيَى وَأَبِي كُرَيْبٍ عَنْ أَبِي مُعَاوِيَةَ، “ إِنَّ مِنْ أَشَدِّ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ عَذَابًا الْمُصَوِّرُونَ ” . وَحَدِيثُ سُفْيَانَ كَحَدِيثِ وَكِيعٍ .
وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، قَالَ كُنْتُ مَعَ مَسْرُوقٍ فِي بَيْتٍ فِيهِ تَمَاثِيلُ مَرْيَمَ . فَقَالَ مَسْرُوقٌ هَذَا تَمَاثِيلُ كِسْرَى . فَقُلْتُ لاَ هَذَا تَمَاثِيلُ مَرْيَمَ . فَقَالَ مَسْرُوقٌ أَمَا إِنِّي سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ ”
“திண்ணமாக மறுமை நாளில் (இறைவனி டம்) மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களை வரைவோர்தாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறுவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
குறிப்புகள் :
அபூஸயீத் அல்அஷஜ்ஜு (ரஹ்) வழி அறிவிப்பில் “திண்ணமாக“ எனும் சொல் இடம்பெறவில்லை.
யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) மற்றும் அபூகுறைப் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்புகளில், “உருவங்களை வரைவோர் மறுமை நாளில் நரகவாசிகளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோரில் அடங்குவர்” என இடம்பெற்றுள்ளது. ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.
முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) கூறியதாவது:
“நான் (ஒரு முறை) மஸ்ரூக் (ரஹ்) அவர்களுடன் ஓர் இல்லத்தில் இருந்தேன். அங்கு மர்யம் (அலை) அவர்களின் உருவச் சிலைகள் இருந்தன. அப்போது மஸ்ரூக் (ரஹ்), “இவை (ரோமப் பேரரசர்) ஸீசரின் உருவச் சிலைகள்” என்றார்கள். நான் “இல்லை, இவை மர்யம் (அலை) அவர்களின் உருவச் சிலைகள்” என்றேன்.
அப்போது மஸ்ரூக் (ரஹ்), “கேட்டுக் கொள்!. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போரே’ என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.