அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3936

قَالَ مُسْلِمٌ قَرَأْتُ عَلَى نَصْرِ بْنِ عَلِيٍّ الْجَهْضَمِيِّ عَنْ عَبْدِ الأَعْلَى بْنِ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ :‏

فَقَالَ إِنِّي رَجُلٌ أُصَوِّرُ هَذِهِ الصُّوَرَ فَأَفْتِنِي فِيهَا ‏.‏ فَقَالَ لَهُ ادْنُ مِنِّي ‏.‏ فَدَنَا مِنْهُ ثُمَّ قَالَ ادْنُ مِنِّي ‏.‏ فَدَنَا حَتَّى وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِهِ قَالَ أُنَبِّئُكَ بِمَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يَجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسًا فَتُعَذِّبُهُ فِي جَهَنَّمَ ‏”‏ ‏.‏ وَقَالَ إِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَاصْنَعِ الشَّجَرَ وَمَا لاَ نَفْسَ لَهُ ‏.‏ فَأَقَرَّ بِهِ نَصْرُ بْنُ عَلِيٍّ ‏

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் உருவங்களை வரை(யும் தொழில் செய்துவரு)கிறேன். இதைப் பற்றி எனக்கு மார்க்கத் தீர்ப்பு அளியுங்கள்” என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி), “எனக்கு அருகில் வா” என்றார்கள். அவர் அருகில் வந்தார்.

பிறகு (மீண்டும்) “இன்னும் அருகில் வா” என்றார்கள். அவர் இன்னும் அருகில் வந்தபோது, அவரது தலைமீது கையை வைத்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியை உனக்குச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘உருவங்களை வரையும் ஒவ்வொருவரும் நரகத்திற்கே செல்வர். அவர் வரைந்த ஒவ்வோர் உருவத்திற்கும் அல்லாஹ் உயிர் கொடுப்பான். அவை, அவரை நரகத்தில் வேதனை செய்யும்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

மேலும் “வரைந்துதான் ஆக வேண்டும் என்றால் மரங்கள், உயிரற்ற (இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட)வற்றின் படங்களை வரைந்துகொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் அபில்ஹசன் (ரஹ்)


குறிப்பு :

முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:

நான் (இந்த அறிவிப்பாளர் தொடரில் கிடைத்த இந்த ஹதீஸை) நஸ்ரு பின் அலீ (ரஹ்) (முன்னிலையில் வாசித்துக் காட்டியபோது அவர்கள்) அதை (உண்மையான ஹதீஸ் என) ஏற்றுக்கொண்டார்கள்.