அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3997

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، أَنَّ بُسْرَ بْنَ سَعِيدٍ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ :‏

كُنَّا فِي مَجْلِسٍ عِنْدَ أُبَىِّ بْنِ كَعْبٍ فَأَتَى أَبُو مُوسَى الأَشْعَرِيُّ مُغْضَبًا حَتَّى وَقَفَ فَقَالَ أَنْشُدُكُمُ اللَّهَ هَلْ سَمِعَ أَحَدٌ مِنْكُمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ الاِسْتِئْذَانُ ثَلاَثٌ فَإِنْ أُذِنَ لَكَ وَإِلاَّ فَارْجِعْ ‏”‏ ‏.‏ قَالَ أُبَىٌّ وَمَا ذَاكَ قَالَ اسْتَأْذَنْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ أَمْسِ ثَلاَثَ مَرَّاتٍ فَلَمْ يُؤْذَنْ لِي فَرَجَعْتُ ثُمَّ جِئْتُهُ الْيَوْمَ فَدَخَلْتُ عَلَيْهِ فَأَخْبَرْتُهُ أَنِّي جِئْتُ أَمْسِ فَسَلَّمْتُ ثَلاَثًا ثُمَّ انْصَرَفْتُ قَالَ قَدْ سَمِعْنَاكَ وَنَحْنُ حِينَئِذٍ عَلَى شُغْلٍ فَلَوْ مَا اسْتَأْذَنْتَ حَتَّى يُؤْذَنَ لَكَ قَالَ اسْتَأْذَنْتُ كَمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَوَاللَّهِ لأُوجِعَنَّ ظَهْرَكَ وَبَطْنَكَ ‏.‏ أَوْ لَتَأْتِيَنَّ بِمَنْ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا ‏.‏ فَقَالَ أُبَىُّ بْنُ كَعْبٍ فَوَاللَّهِ لاَ يَقُومُ مَعَكَ إِلاَّ أَحْدَثُنَا سِنًّا قُمْ يَا أَبَا سَعِيدٍ ‏.‏ فَقُمْتُ حَتَّى أَتَيْتُ عُمَرَ فَقُلْتُ قَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ هَذَا ‏

நாங்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அபூமூஸா (ரலி) கோபத்துடன் வந்து நின்று, “அல்லாஹ்வை முன்வைத்து நான் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறை கோரி,) உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி! (வீட்டுக்குள் செல்லலாம்) இல்லாவிட்டால் திரும்பிவிடுங்கள்’ என்று கூறியதைக் கேட்டவர் உங்களில் யாரேனும் உள்ளாரா?” என்று கேட்டார்கள்.  உபை பின் கஅப் (ரலி), “என்ன நடந்தது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூமூஸா (ரலி), “நேற்று நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) (வீட்டிற்குச் சென்று) அவர்களிடம் மூன்று முறை அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிறகு இன்று அவர்களிடம் சென்று, நேற்று நான் வந்து (அனுமதி கேட்டு) மூன்று முறை ஸலாம் சொன்னேன். (பதில் வராததால்) பிறகு நான் திரும்பிவிட்டேன்” என்று கூறினேன்.

அதற்கு உமர் (ரலி), “உமது குரலை நாம் செவியுற்றோம். அப்போது நாம் ஒரு (முக்கிய) அலுவலில் மூழ்கியிருந்தோம். அனுமதி வழங்கப்படும்வரை அனுமதி கேட்பதை நீங்கள் நீட்டி இருந்தால் நன்றாயிருந்திருக்குமே!” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றதற்கு ஏற்ப (மும்முறை) அனுமதி கேட்டேன்” என்றேன்.

உமர் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்ப)தற்கு உமக்குச் சாட்சியம் அளிப்பவர் ஒருவரை நீர் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் உமது முதுகிலும் வயிற்றிலும் நாம் தண்டிக்க வேண்டியதிருக்கும்” என்று கூறினார்கள் என்றார்கள்.

அப்போது உபை பின் கஅப் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களில் வயதில் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) எழுவார்” என்று கூறிவிட்டு, “அபூஸயீதே! எழும்!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் எழுந்து உமர் (ரலி) அவர்களிடம் சென்று, “அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்” என்று (சாட்சியம்) சொன்னேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment