அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3998

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرٌ، – يَعْنِي ابْنَ مُفَضَّلٍ – حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ :‏

أَنَّ أَبَا مُوسَى، أَتَى بَابَ عُمَرَ فَاسْتَأْذَنَ فَقَالَ عُمَرُ وَاحِدَةٌ ‏.‏ ثُمَّ اسْتَأْذَنَ الثَّانِيَةَ فَقَالَ عُمَرُ ثِنْتَانِ ‏.‏ ثُمَّ اسْتَأْذَنَ الثَّالِثَةَ فَقَالَ عُمَرُ ثَلاَثٌ ‏.‏ ثُمَّ انْصَرَفَ فَأَتْبَعَهُ فَرَدَّهُ فَقَالَ إِنْ كَانَ هَذَا شَيْئًا حَفِظْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَهَا وَإِلاَّ فَلأَجْعَلَنَّكَ عِظَةً ‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ فَأَتَانَا فَقَالَ أَلَمْ تَعْلَمُوا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الاِسْتِئْذَانُ ثَلاَثٌ ‏”‏ ‏.‏ قَالَ فَجَعَلُوا يَضْحَكُونَ – قَالَ – فَقُلْتُ أَتَاكُمْ أَخُوكُمُ الْمُسْلِمُ قَدْ أُفْزِعَ تَضْحَكُونَ انْطَلِقْ فَأَنَا شَرِيكُكَ فِي هَذِهِ الْعُقُوبَةِ ‏.‏ فَأَتَاهُ فَقَالَ هَذَا أَبُو سَعِيدٍ ‏.‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، ح

وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْجُرَيْرِيِّ، وَسَعِيدِ بْنِ يَزِيدَ كِلاَهُمَا عَنْ أَبِي نَضْرَةَ، قَالاَ سَمِعْنَاهُ يُحَدِّثُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏.‏ بِمَعْنَى حَدِيثِ بِشْرِ بْنِ مُفَضَّلٍ عَنْ أَبِي مَسْلَمَةَ.

அபூமூஸா (ரலி), (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்குச் சென்று (உள்ளே நுழைய) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி), “ஒன்று” என்றார்கள். பிறகு அபூமூஸா (ரலி) இரண்டாவது முறை அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி), “இரண்டு“ என்றார்கள். பிறகு அபூமூஸா (ரலி) மூன்றாவது முறை அனுமதி கேட்டபோது, உமர் (ரலி), “மூன்று” என்றார்கள்.

பிறகு அபூமூஸா (ரலி) திரும்பிச் சென்றுவிட்டார்கள். அப்போது உமர் (ரலி), அபூமூஸா (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து (செல்ல ஓர் ஆளனுப்பி) தம்மிடம் திரும்பிவரச் செய்து, “இவ்வாறு நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டிருந்தால் அதற்கு ஆதாரம் கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் உங்களை (மற்றவர்களுக்கு) ஒரு பாடமாக ஆக்கி விடுவேன்!” என்று கூறினார்கள்.

அப்போது அபூமூஸா (ரலி) எங்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அனுமதி கோருதல் மூன்று முறையாகும்’ என்று கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதைக் கேட்டு மக்கள் சிரிக்கலாயினர். உடனே (அபூஸயீத் ஆகிய) நான், “உங்களுடைய சகோதர முஸ்லிம் பீதிக்கு உள்ளாக்கப்பட்டு உங்களிடம் வந்துள்ளார். (அவரைக் கண்டு) நீங்கள் சிரிக்கின்றீர்களே?” என்று கூறிவிட்டு, (அபூமூஸா (ரலி) அவர்களிடம்) “நீங்கள் வாருங்கள். இந்தத் தண்டனையில் உங்களுக்கு நான் பங்காளியாயிருப்பேன்!” என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அபூமூஸா (ரலி), “இதோ அபூஸயீத் (சாட்சி)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment