அத்தியாயம்: 39, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4116

وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ، وَسَالِمٍ ابْنَىْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الشُّؤْمُ فِي الدَّارِ وَالْمَرْأَةِ وَالْفَرَسِ ‏”‏

“அபசகுனம் (என்று இருக்குமானால்) மனை, மனைவி, புரவி ஆகிய மூன்றில்தான் இருந்திருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

இல்லம், இல்லாள், வாகனம் ஆகிய மூன்றையும் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் தேவை என்பதே இந்த/இதையொத்த ஹதீஸ்களின் கருவேயன்றி அம்மூன்றிலும் துர்குறிகள் உளவென்று கொள்ளலாகாது.

எ.கா: எவரும் எவருக்கும் ஸஜ்தா எனும் சிரவணக்கம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் நபிமொழி:

لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا

“யாருக்காவது ஒருவர் ஸஜ்தாச் செய்வது கூடும் என்றிருந்தால், தன் கணவனுக்கு அவரின் மனைவியை ஸஜ்தாச் செய்ய நான் கட்டளை இட்டிருப்பேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள். பதிவு : இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்களின் ஹதீஸ் 1159.

Share this Hadith:

Leave a Comment