அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4017

وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتِ :‏

اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ ‏” قَالَتْ أَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ ‏”‏ قَدْ قُلْتُ وَعَلَيْكُمْ” ‏


حَدَّثَنَاهُ حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ، بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِي حَدِيثِهِمَا جَمِيعًا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ قَدْ قُلْتُ عَلَيْكُمْ ‏” وَلَمْ يَذْكُرُوا الْوَاوَ ‏

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டு, “அஸ்ஸாமு அலைக்கும்“ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (மாற்றி முகமன்) கூறினர். உடனே நான் “அலைக்குமுஸ்ஸாமு வல் லஅனா“ (உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று பதில் சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே விரும்புகின்றான்” என்று கூறினார்கள்.

நான் “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான்தான், வ அலைக்கும் (நீங்கள்  சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்க வில்லையா)?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஸாலிஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான்தான்,.அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (திருப்பிக்) கேட்டார்கள்” என இடம்பெற்றுள்ளது. அவற்றில் (“அலைக்கும்” என்பதற்கு முன்) “வ” எனும் (இடைச்)சொல் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment