அத்தியாயம்: 39, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4024

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

خَرَجَتْ سَوْدَةُ بَعْدَ مَا ضُرِبَ عَلَيْهَا الْحِجَابُ لِتَقْضِيَ حَاجَتَهَا وَكَانَتِ امْرَأَةً جَسِيمَةً تَفْرَعُ النِّسَاءَ جِسْمًا لاَ تَخْفَى عَلَى مَنْ يَعْرِفُهَا فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ يَا سَوْدَةُ وَاللَّهِ مَا تَخْفَيْنَ عَلَيْنَا فَانْظُرِي كَيْفَ تَخْرُجِينَ ‏.‏ قَالَتْ فَانْكَفَأَتْ رَاجِعَةً وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِي وَإِنَّهُ لَيَتَعَشَّى وَفِي يَدِهِ عَرْقٌ فَدَخَلَتْ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي خَرَجْتُ فَقَالَ لِي عُمَرُ كَذَا وَكَذَا ‏.‏ قَالَتْ فَأُوحِيَ إِلَيْهِ ثُمَّ رُفِعَ عَنْهُ وَإِنَّ الْعَرْقَ فِي يَدِهِ مَا وَضَعَهُ فَقَالَ ‏ “‏ إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ ‏”


وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ يَفْرَعُ النِّسَاءَ جِسْمُهَا ‏.‏ زَادَ أَبُو بَكْرٍ فِي حَدِيثِهِ فَقَالَ هِشَامٌ يَعْنِي الْبَرَازَ ‏‏

وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ وَكَانَتِ امْرَأَةً يَفْرَعُ النَّاسَ جِسْمُهَا ‏ قَالَ وَإِنَّهُ لَيَتَعَشَّى ‏‏

وَحَدَّثَنِيهِ سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ

“முகத்திரை அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னர் (நபியவர்களின் மனைவி) ஸவ்தா (ரலி), இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (இரவு நேரத்தில்) வெளியே சென்றார்கள். ஸவ்தா (ரலி) பெண்களில் நல்ல உயரமும் (உயரத்துக்கு ஏற்ற) பருமனும் உள்ளவராக இருந்தார்கள். அவரை அறிந்தவர்களுக்கு அவர் (முகத்திரை அணிந்து சென்றாலும் அவர்) யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது.

அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஸவ்தா (ரலி) அவர்களைப் பார்த்து (அறிந்து) விட்டு, “ஸவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! (முகத்திரை அணிந்திருந்தாலும்) உங்களை எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிந்துகொள்ள முடியும் நிலையில்) எப்படி வெளியே வருகிறீர்கள் என்பது குறித்து யோசித்துப் பாருங்கள்” என்று சொன்னார்கள்.

ஸவ்தா (ரலி) உடனே அங்கிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கையில் இறைச்சி ஒட்டியிருந்த எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. ஸவ்தா (ரலி) வீட்டினுள் நுழைந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் (இயற்கைக் கடனை நிறைவேற்ற) வெளியே சென்றேன். அப்போது உமர் (ரலி) இப்படி இப்படிச் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது, பின்னர் அந்நிலை விலக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் அந்த எலும்புத் துண்டு (அப்படியே) இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்திருக்கவில்லை. மேலும், அவர்கள் “(பெண்களே!) நீங்கள் உங்கள் (அடிப்படைத்) தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீ ஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸவ்தா (ரலி) பெண்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்டவராயிருந்தார்” என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அவரது வழி அறிவிப்பில் “அதாவது கழிப்பிடங்களுக்கு(ச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது)” என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) (விளக்கம்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸவ்தா (ரலி), மக்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்ட பெண்ணாக இருந்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment