அத்தியாயம்: 39, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4025

حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ :‏ ‏

أَنَّ أَزْوَاجَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم احْجُبْ نِسَاءَكَ ‏.‏ فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً مِنَ اللَّيَالِي عِشَاءً وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً فَنَادَاهَا عُمَرُ أَلاَ قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ ‏.‏ حِرْصًا عَلَى أَنْ يُنْزِلَ الْحِجَابَ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْحِجَابَ


حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் (மதீனாவின்) புறநகர்ப் பகுதிகளுக்கு இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு வேளைகளில் புறப்பட்டுச் செல்வார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தங்கள் மனைவியரைத் திரைக்குள்ளிருக்குமாறு அறிவுறுத்துங்கள்” என்று கூறினார்கள்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு அறிவுறுத்தவில்லை. ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா பின்த்தி ஸம்ஆ (ரலி) ஓரிரவின் இஷா நேரத்தில் வெளியே சென்றார்கள்.

ஸவ்தா (ரலி) உயரமான பெண்ணாக இருந்தார்கள். உமர் (ரலி) ஸவ்தா (ரலி) அவர்களை நோக்கி, “ஸவ்தாவே! (இருளிலும்) நாங்கள் உம்மை யார் என்று அடையாளம் தெரிந்துகொண்டோம்” என்று கூறினார்கள். முகத்திரை தொடர்பான சட்டம் அருளப்பட வேண்டுமென்ற பேராவலிலேயே  இவ்வாறு கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவ்வாறே ஹிஜாப் தொடர்பான வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

‘புற நகர்ப் பகுதிகள்’ என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘மனாஸிஉ’ எனும் அரபுச் சொல், விசாலமான இடங்களைக் குறிக்கும்.