حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَخَلَفُ بْنُ هِشَامٍ جَمِيعًا عَنْ حَمَّادٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ غَيْلَانَ عَنْ مُطَرِّفٍ قَالَ :
صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ وَإِذَا نَهَضَ مِنْ الرَّكْعَتَيْنِ كَبَّرَ فَلَمَّا انْصَرَفْنَا مِنْ الصَّلَاةِ قَالَ أَخَذَ عِمْرَانُ بِيَدِي ثُمَّ قَالَ لَقَدْ صَلَّى بِنَا هَذَا صَلَاةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ قَدْ ذَكَّرَنِي هَذَا صَلَاةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
(ஒருமுறை) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அலீ (ரலி) ஸஜ்தாவுக்காகக் குனியும்போது தக்பீர் கூறினார்கள். (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள். நாங்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் இம்ரான் (ரலி) எனது கையைப் பிடித்து ‘நமக்கு இவர் முஹம்மது (ஸல்) அவர்களின் தொழுகையைப் போன்றே தொழுவித்தார்’ என்றோ ‘இவர் முஹம்மது (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவுபடுத்திவிட்டார்’ என்றோ சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்)