حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ :
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنْ الرُّكُوعِ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ فِي الصَّلَاةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنْ الْمَثْنَى بَعْدَ الْجُلُوسِ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا حُجَيْنٌ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ بِمِثْلِ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ وَلَمْ يَذْكُرْ قَوْلَ أَبِي هُرَيْرَةَ إِنِّي أَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ حِينَ يَسْتَخْلِفُهُ مَرْوَانُ عَلَى الْمَدِينَةِ إِذَا قَامَ لِلصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ وَفِي حَدِيثِهِ فَإِذَا قَضَاهَا وَسَلَّمَ أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைக்காக நின்றவுடன் (தொடக்க) தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூச் செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா வ லக்கல் ஹம்து’ என்று கூறுவார்கள். பிறகு ஸஜ்தாவுக்காகத் தாழும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) ஸஜ்தாவுக்குச் செல்லும்போதும் பின்னர் (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடிக்கும்வரை இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமர்ந்து விட்டு எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். பின்னர், “தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)
குறிப்பு :
அபூபக்ரு பின் அப்திர்ரஹ்மான் அல் ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைக்காக நின்றவுடன் தக்பீர் கூறுவார்கள் …” எனத் தொடங்கித் தொடர்கிறது. ஆனால், (தொழுகின்ற முறையில்) உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை முறையோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என அபூஹுரைரா (ரலி) குறிப்பிட்ட இறுதிப் பகுதி அதில் இடம்பெறவில்லை.
யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “மர்வான் பின் ஹகம் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுனராக நியமித்திருந்தபோது, அபூஹுரைரா (ரலி) கடமையான தொழுகையைத் தொழுவிக்கத் தொடங்கும்போது (தொடக்க) தக்பீர் கூறுவார்கள் …” எனத் தொடங்கித் தொடர்கிறது. அதன் இறுதியில், “தொழுது முடித்து விட்டு ஸலாம் கொடுத்ததும் பள்ளிவாசலில் அமர்ந்திருப்பவர்களை முன்னோக்கி அமர்ந்து கொண்டு, ‘என் உயிர் கையிலுள்ளவன் மீது ஆணையாக! தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்’ என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.