அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 629

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏دَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْتُ لَهَا أَلَا تُحَدِّثِينِي عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ بَلَى ‏ ‏ثَقُلَ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَصَلَّى النَّاسُ قُلْنَا لَا وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ضَعُوا لِي مَاءً فِي ‏ ‏الْمِخْضَبِ ‏ ‏فَفَعَلْنَا فَاغْتَسَلَ ثُمَّ ذَهَبَ ‏ ‏لِيَنُوءَ ‏ ‏فَأُغْمِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَقَالَ أَصَلَّى النَّاسُ قُلْنَا لَا وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ضَعُوا لِي مَاءً فِي ‏ ‏الْمِخْضَبِ ‏ ‏فَفَعَلْنَا فَاغْتَسَلَ ثُمَّ ذَهَبَ ‏ ‏لِيَنُوءَ ‏ ‏فَأُغْمِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَقَالَ أَصَلَّى النَّاسُ قُلْنَا لَا وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ضَعُوا لِي مَاءً فِي ‏ ‏الْمِخْضَبِ ‏ ‏فَفَعَلْنَا فَاغْتَسَلَ ثُمَّ ذَهَبَ ‏ ‏لِيَنُوءَ ‏ ‏فَأُغْمِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَقَالَ أَصَلَّى النَّاسُ فَقُلْنَا لَا وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَتْ وَالنَّاسُ ‏ ‏عُكُوفٌ ‏ ‏فِي الْمَسْجِدِ يَنْتَظِرُونَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِصَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ قَالَتْ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَأَتَاهُ الرَّسُولُ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْمُرُكَ أَنْ تُصَلِّيَ بِالنَّاسِ فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَكَانَ رَجُلًا رَقِيقًا يَا ‏ ‏عُمَرُ ‏ ‏صَلِّ بِالنَّاسِ قَالَ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَنْتَ أَحَقُّ بِذَلِكَ قَالَتْ فَصَلَّى بِهِمْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏تِلْكَ الْأَيَّامَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَدَ مِنْ نَفْسِهِ خِفَّةً فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ أَحَدُهُمَا ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏لِصَلَاةِ الظُّهْرِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ فَلَمَّا رَآهُ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏ذَهَبَ لِيَتَأَخَّرَ ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏إِلَيْهِ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ لَا يَتَأَخَّرَ وَقَالَ لَهُمَا أَجْلِسَانِي إِلَى جَنْبِهِ فَأَجْلَسَاهُ إِلَى جَنْبِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَكَانَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يُصَلِّي وَهُوَ قَائِمٌ بِصَلَاةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَاعِدٌ ‏
‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏فَقُلْتُ لَهُ أَلَا أَعْرِضُ عَلَيْكَ مَا حَدَّثَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هَاتِ فَعَرَضْتُ حَدِيثَهَا عَلَيْهِ فَمَا أَنْكَرَ مِنْهُ شَيْئًا غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏أَسَمَّتْ لَكَ الرَّجُلَ الَّذِي كَانَ مَعَ ‏ ‏الْعَبَّاسِ ‏ ‏قُلْتُ لَا قَالَ هُوَ ‏ ‏عَلِيٌّ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் அறிவிப்பீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (அறிவிக்கிறேன்)” என்று சொல்லிவிட்டு,

“நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானது. அந்த (இஷா) நேரத்தில், ‘மக்கள் தொழுதுவிட்டனரா?’ என்று நபியவர்கள் கேட்டார்கள். நாங்கள், ‘இல்லை, அல்லாஹ்வின் தூதரே! மக்கள் உங்களுக்காகக் காத்திருகின்றனர்’ என்று கூறினோம். அப்போது, ‘நீர்த் தொட்டியில் எனக்காக நீரிடுங்கள்’ என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். ஆனால், (எழ முடியாமல்) மயக்கமுற்று விட்டார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது ‘மக்கள் தொழுதுவிட்டனரா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘இல்லை; அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர், அல்லாஹ்வின் தூதரே!’ என்று சொன்னோம். அப்போது, ‘நீர்த் தொட்டியில் எனக்காக நீரிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் குளித்துவிட்டு எழ முற்பட்டார்கள். ஆனால், (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்று விட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டனரா?’ என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள், ‘இல்லை; அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர், அல்லாஹ்வின் தூதரே!’ என்றோம்.

அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் காத்திருந்தனர்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்” என்று சொன்னார். அதற்கு இளகிய மனமுடையவரான அபூபக்ரு (ரலி) (உமர் ரலி இடம்) “உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி), “இதற்கு நீங்கள்தாம் (என்னைவிடத்) தகுதியுடையவர்” என்று கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ரு (ரலி) (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது நோய் சற்றுக் குறைந்திருப்பதை அறிந்து, இரண்டு பேருக்கிடையே (கைத்தாங்கலாக) லுஹ்ருத் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள். அவ்விருவரில் அப்பாஸ் (ரலி) ஒருவராவார்கள். அப்போது அபூபக்ரு (ரலி) மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் அபூபக்ரு (ரலி) பின்வாங்க முயன்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பின்வாங்க வேண்டாமென அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மைத் தாங்கி வந்த) இருவரிடமும், ‘என்னை அபூபக்ரு அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார வையுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூபக்ரு (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது நபி (ஸல்) அமர்ந்து தொழ, அவர்களைப் பின்பற்றி அபூபக்ரு (ரலி) நின்று தொழுதார்கள். மக்கள் அபூபக்ரைப் பின்பற்றித் தொழலானார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

குறிப்பு :

“நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோய்வாய்ப்பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) என்னிடம் கூறியதை நான் உங்களிடம் எடுத்துரைக்கட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), ‘ஆகட்டும் (சொல்லுங்கள்)’ என்றார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அறிவித்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) மறுக்கவில்லை. ஆயினும், ‘அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த மற்றொருவரின் பெயரை ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), ‘அவர்தாம் அலீ (ரலி)’ என்று கூறினார்கள்” என்பதாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்கள்.

Share this Hadith:

Leave a Comment