அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 634

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ

لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَاءَ ‏ ‏بِلَالٌ ‏ ‏يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَقَالَ ‏ ‏مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَجُلٌ ‏ ‏أَسِيفٌ ‏ ‏وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لَا يُسْمِعْ النَّاسَ فَلَوْ أَمَرْتَ ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ قَالَتْ فَقُلْتُ ‏ ‏لِحَفْصَةَ ‏ ‏قُولِي لَهُ إِنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لَا يُسْمِعْ النَّاسَ فَلَوْ أَمَرْتَ ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَتْ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّكُنَّ لَأَنْتُنَّ ‏ ‏صَوَاحِبُ ‏ ‏يُوسُفَ ‏ ‏مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ قَالَتْ فَأَمَرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ قَالَتْ فَلَمَّا دَخَلَ فِي الصَّلَاةِ وَجَدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ نَفْسِهِ خِفَّةً فَقَامَ ‏ ‏يُهَادَى ‏ ‏بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلَاهُ ‏ ‏تَخُطَّانِ ‏ ‏فِي الْأَرْضِ قَالَتْ فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حِسَّهُ ذَهَبَ يَتَأَخَّرُ ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏إِلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُمْ مَكَانَكَ فَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏قَالَتْ فَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏قَائِمًا ‏ ‏يَقْتَدِي ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏بِصَلَاةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيَقْتَدِي النَّاسُ بِصَلَاةِ ‏ ‏أَبِي بَكْرٍ

حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَفِي حَدِيثِهِمَا لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَضَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏فَأُتِيَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى أُجْلِسَ إِلَى جَنْبِهِ وَكَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏يُسْمِعُهُمْ التَّكْبِيرَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عِيسَى ‏ ‏فَجَلَسَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏إِلَى جَنْبِهِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏يُسْمِعُ النَّاسَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாயிருந்தபோது அவர்களைத் தொழுகைத் தலைமைக்கு அழைப்பதற்காக பிலால் (ரலி) வந்தார்கள். அப்போது “அபூபக்ரு அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்!” என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ரு (ரலி) சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்; நீங்கள் (தொழ) நின்ற இடத்தில் அவர் நின்றால் (உணர்ச்சிப் பெருக்கால் அழுது விடுவார்) அவரால் (உரக்கு ஓதி) மக்கள் கேட்கும்படி செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னேன். அப்போது, “அபூபக்ரிடம் சொல்லுங்கள்; அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று (மீண்டும்) நபியவர்கள் சொன்னார்கள். உடனே நான் (மற்றொரு துணைவியாரான) ஹஃப்ஸாவிடம் “அபூபக்ரு (ரலி) சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்; உங்களது இடத்தில் அவர் நின்று, அவரால் மக்களுக்கு (குர்ஆன் ஓதுவதை)க் கேட்கும்படி செய்ய முடியாது; (தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால் என்ன? என்று நபியவர்களிடம் கூறுங்கள்” என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே சொன்னார். அதற்கு “நீங்களெல்லாம் (நபி) யூசுஃப் (அலை) அவர்களுடைய (வரலாற்றுத்) தோழியரைப் போன்ற(விவரமில்லாத)வர்கள்தாம்” என நபியவர்கள் கூறிவிட்டு, “மக்களுக்குத் தொழுவிக்கும்படி அபூபக்ரிடம் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே தங்களுக்குத் தொழுவிக்குமாறு அபூபக்ரு (ரலி) அவர்களிடம் மக்கள் கூறினர். அபூபக்ரு (ரலி) தொழுவிக்க ஆரம்பித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தமது உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதை உணர்ந்து, எழுந்து இருவரு(டைய கைத்தாங்கலு)க்கிடையே தொங்கியபடி தம் கால்கள் பூமியில் இழுபட(தொழ)ப் புறப்பட்டார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவதை அறிந்த அபூபக்ரு (ரலி) பின்வாங்க முயன்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு சைகை செய்துவிட்டு, அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமர்ந்துகொண்டு மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ரு (ரலி) நின்றுகொண்டு தொழலானார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ரும், அபூபக்ரு (ரலி) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்), ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) ஆகிய இருவரின் அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்த அந்த (இறுதி) நோயின் போது…” என்று இடம்பெற்றுள்ளது.

இப்னு முஸ்ஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைத்துவரப்பட்டு அபூபக்ரு (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தப்பட்டார்கள். நபி (ஸல்) மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ரு (ரலி), (அல்லாஹு அக்பர் எனும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும்படி உரத்துக் கூறிக்கொண்டிருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமர்ந்து மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ரு (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு மக்களுக்குக் கேட்கும் விதமாக (தக்பீர்) கூறிக்கொண்டிருந்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment