அத்தியாயம்: 4, பாடம்: 24, ஹதீஸ் எண்: 642

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ يَعْنِي ابْنَ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ

صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ يَوْمًا ثُمَّ انْصَرَفَ فَقَالَ يَا فُلَانُ أَلَا تُحْسِنُ صَلَاتَكَ أَلَا يَنْظُرُ الْمُصَلِّي إِذَا صَلَّى كَيْفَ ‏ ‏يُصَلِّي فَإِنَّمَا ‏ ‏يُصَلِّي لِنَفْسِهِ إِنِّي وَاللَّهِ ‏ ‏لَأُبْصِرُ مِنْ وَرَائِي كَمَا أُبْصِرُ مِنْ بَيْنِ يَدَيَّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு ஒருபோது தொழுவித்து முடித்ததும் (ஒருவரைப் பார்த்து), “இன்னாரே, நீங்கள் நல்ல முறையில் தொழக் கூடாதா? தாம் எவ்வாறு தொழுது கொண்டிருக்கிறோம் என்பதில் தொழுபவர் கவனம் செலுத்தக் கூடாதா?அவர் தமக்காகத்தானே தொழுகிறார்? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்கு முன்னால் இருப்பவர்களைப் பார்ப்பதைப் போன்றே எனக்குப் பின்னால் இருப்பவர்களையும் பார்க்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)