அத்தியாயம்: 4, பாடம்: 33, ஹதீஸ் எண்: 681

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ

مَا قَرَأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْجِنِّ وَمَا رَآهُمْ انْطَلَقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ ‏ ‏عَامِدِينَ ‏ ‏إِلَى سُوقِ ‏ ‏عُكَاظٍ ‏ ‏وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْهِمْ الشُّهُبُ فَرَجَعَتْ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِمْ فَقَالُوا مَا لَكُمْ قَالُوا حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ قَالُوا مَا ذَاكَ إِلَّا مِنْ شَيْءٍ حَدَثَ فَاضْرِبُوا مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ فَانْطَلَقُوا يَضْرِبُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا فَمَرَّ النَّفَرُ الَّذِينَ أَخَذُوا نَحْوَ ‏ ‏تِهَامَةَ ‏ ‏وَهُوَ بِنَخْلٍ ‏ ‏عَامِدِينَ ‏ ‏إِلَى سُوقِ ‏ ‏عُكَاظٍ ‏ ‏وَهُوَ ‏ ‏يُصَلِّي بِأَصْحَابِهِ صَلَاةَ الْفَجْرِ فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ اسْتَمَعُوا لَهُ وَقَالُوا هَذَا الَّذِي حَالَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ فَرَجَعُوا إِلَى قَوْمِهِمْ فَقَالُوا يَا قَوْمَنَا ‏ ‏إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا

فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى نَبِيِّهِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنْ الْجِنِّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(என்று குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ஒருபோது உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே (அந்த நேரத்தில்) தடை ஏற்படுத்தப் பட்டுவிட்டது. மேலும், (வானுலகச் செய்திகளை ஒட்டுக்கேட்கச் செல்லும்) ஷைத்தான்கள்மீது தீப்பந்தங்கள் (எரிகற்கள்) ஏவிவிடப்பட்டிருந்தன. ஷைத்தான்கள் தம் கூட்டத்தாரிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல் வெறுமனே) திரும்பியபோது “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று (ஷைத்தான்) கூட்டத்தார் கேட்டார்கள். அதற்கு ஷைத்தான்கள் “நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது; மேலும், எங்கள்மீது தீப்பந்தங்கள் ஏவப் பட்டன” என்று கூறினர். “ஏதேனும் புதியதொரு நிகழ்ச்சி ஏற்பட்டதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்று, நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்” என்றார்கள்.

அவ்வாறே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்றார்கள். அவர்களில் ஒரு குழுவினர் திஹாமா எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். உக்காழ் சந்தைக்குச் செல்லும் வழியில் நக்ல் எனுமிடத்தில் அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை ஷைத்தான்கள் செவியுற்றபோது “நமக்கும் வானுலகச் செய்திக்கும் இடையே தடையாக இருப்பது இதுதான்” என்று கூறிக்கொண்டு, தங்கள் கூட்டத்தாரிடம் திரும்பினர். அவர்களிடம், “எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் வியத்தகு ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, அதை நாங்கள் நம்பினோம். நாங்கள் (இனி) ஒருபோதும் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம்” என்று கூறினர்.

இதையடுத்து அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு “நிச்சயமாக ஜின்களில் சிலர் (குர்ஆனைச்) செவியேற்றனர் என எனக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப் பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக!” எனும் (72:1ஆவது) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment