حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ دَاوُدَ عَنْ عَامِرٍ قَالَ سَأَلْتُ عَلْقَمَةَ :
هَلْ كَانَ ابْنُ مَسْعُودٍ شَهِدَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ قَالَ فَقَالَ عَلْقَمَةُ أَنَا سَأَلْتُ ابْنَ مَسْعُودٍ فَقُلْتُ هَلْ شَهِدَ أَحَدٌ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ قَالَ لَا وَلَكِنَّا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ذَاتَ لَيْلَةٍ فَفَقَدْنَاهُ فَالْتَمَسْنَاهُ فِي الْأَوْدِيَةِ وَالشِّعَابِ فَقُلْنَا اسْتُطِيرَ أَوْ اغْتِيلَ قَالَ فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ فَلَمَّا أَصْبَحْنَا إِذَا هُوَ جَاءٍ مِنْ قِبَلَ حِرَاءٍ قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَقَدْنَاكَ فَطَلَبْنَاكَ فَلَمْ نَجِدْكَ فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ فَقَالَ أَتَانِي دَاعِي الْجِنِّ فَذَهَبْتُ مَعَهُ فَقَرَأْتُ عَلَيْهِمْ الْقُرْآنَ قَالَ فَانْطَلَقَ بِنَا فَأَرَانَا آثَارَهُمْ وَآثَارَ نِيرَانِهِمْ وَسَأَلُوهُ الزَّادَ فَقَالَ لَكُمْ كُلُّ عَظْمٍ ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ يَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا يَكُونُ لَحْمًا وَكُلُّ بَعْرَةٍ عَلَفٌ لِدَوَابِّكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا تَسْتَنْجُوا بِهِمَا فَإِنَّهُمَا طَعَامُ إِخْوَانِكُمْ
و حَدَّثَنِيهِ عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ دَاوُدَ بِهَذَا الْإِسْنَادِ إِلَى قَوْلِهِ وَآثَارَ نِيرَانِهِمْ قَالَ الشَّعْبِيُّ وَسَأَلُوهُ الزَّادَ وَكَانُوا مِنْ جِنِّ الْجَزِيرَةِ إِلَى آخِرِ الْحَدِيثِ مِنْ قَوْلِ الشَّعْبِيِّ مُفَصَّلًا مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ دَاوُدَ عَنْ الشَّعْبِيِّ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى قَوْلِهِ وَآثَارَ نِيرَانِهِمْ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ
நான் அல்கமா (ரஹ்) அவர்களிடம், இப்னு மஸ்ஊத் (ரலி) ‘ஜின்(-இரவு’ எனச் பேசப்பட்ட அந்த) இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அல்கமா (ரஹ்), நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உங்களில் யாராவது இருந்தீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை; ஆனால், ஒரு நாள் இரவு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது திடீரென அவர்களைக் காணவில்லை. எனவே, பள்ளத்தாக்குகளிலும் மலைக் கணவாய்களிலும் அவர்களைத் தேடிப்பார்த்தோம். (அவர்கள் அங்கு கிடைக்காமல் போகவே) “அவர்களை ஜின் தூக்கிச் சென்றிருக்கும்; அல்லது மர்மமான முறையில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பின்னர் அன்றைய மோசமான இரவை(ஒரு வழியாக)க் கழித்தோம்.
அதிகாலையில் நபி (ஸல்) ஹிரா மலைக் குன்றுப் பக்கமிருந்து வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் காணாமல் நாங்கள் தேடினோம். நீங்கள் கிடைக்காமல் போகவே அந்த மோசமான இரவை (ஒருவாறு) கழித்தோம்” என்று கூறினோம்.
அப்போது நபி (ஸல்), “ஜின்களில் ஒருவர் என்னை அழைக்க வந்தார். எனவே அவருடன் சென்று ஜின்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினேன்” என்று கூறினார்கள். பிறகு எங்களை அழைத்துச் சென்று ஜின்கள் விட்டுச்சென்ற அடையாளங்களையும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் காட்டினார்கள்.
ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு) ஆகுமானதைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நபி (ஸல்), “அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்கள் பிராணிக்குத் தீவனமாகும்” என்று கூறியுள்ளார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் தோழர்களிடம்), “எனவே, நீங்கள் (எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் (மல-ஜலம் கழித்தபின்) துப்புரவு செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத்(ரலி) வழியாக ஆமிர் பின் ஷரஹ்பீல் (ரஹ்)
குறிப்புகள் :
இஸ்மாயீல் பின் இபுராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும்” என்பதுவரை மட்டும் இடம்பெற்றுள்ளது.
“நபி (ஸல்) அவர்களிடம் (தங்களது) உணவு குறித்து ஜின்கள் வினவியோர் (அரபு) தீபகற்பத்தைச் சேர்ந்த ஜின்கள் ஆவர்” என்று ஷஅபீ (ரஹ்) கூறுகிறார்.
அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) வழி அறிவிப்பிலும் “… அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும்” என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள ஜின்களின் உணவைப் பற்றிய கேள்விக் குறிப்புகள் இடம்பெறவில்லை.
மேற்காணும் நிகழ்வின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, அந்த இரவு ‘ஜின்-இரவு’ என அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.