و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسٍ :
قَالَ أَنَسٌ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ مَعَ أُمِّهِ وَهُوَ فِي الصَّلَاةِ فَيَقْرَأُ بِالسُّورَةِ الْخَفِيفَةِ أَوْ بِالسُّورَةِ الْقَصِيرَةِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுவித்துக் கொண்டிருக்கும் போது (பின்னால் தொழும் பெண்களிடையே உள்ள) குழந்தை, தன் தாயிடம் அழுவதைச் செவியேற்பார்கள். உடனே சுருக்கமான/சிறிய அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஸாபித் அல்புனானீ (ரஹ்)