و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي سُجُودِهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஸஜ்தாவில் “அல்லாஹும்மஃக்பிர்லீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு வ அவ்வலஹு வஆகிரஹு வ அலானிய்யத்தஹு வ ஸிர்ரஹு” (பொருள் : இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றுள் சிறியதையும் பெரியதையும் தொடக்கமானதையும் கடைசியானதையும் வெளிப்படையானதையும் மறைவானதையும் மன்னிப்பாயாக!) என்று பிரார்த்திப்பார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)