حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا مُفَضَّلٌ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ :
مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ نَزَلَ عَلَيْهِ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ يُصَلِّي صَلَاةً إِلَّا دَعَا أَوْ قَالَ فِيهَا سُبْحَانَكَ رَبِّي وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي
நபி (ஸல்), “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது …” என்று தொடங்கும் (110ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது முதல் ஒவ்வொரு தொழுகையிலும் “ஸுப்ஹானக்க ரப்பீ வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ (என் இறைவனே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!)என்று கூறாமல்/ பிரார்த்திக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)